
கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் பத்திரிகையின் 151-வது பதிப்பு ஏப்ரல் 10-ம்தேதி லண்டனில் வெளியிடப்படுகிறது. இந்த இதழின் முன்பக்கத்தில் 'பாரத ரத்னா' சச்சின் தெண்டுல்கரின் படம் இடம் பெறுகிறது. விஸ்டன் புத்தகத்தின் முன் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் புகைப்படம் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.