மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ளவில்லை: இல.கணேசன் பேட்டி
இதுகுறித்து சென்னையில் பாஜக மூத்த
தலைவர் இல.கணேசன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக பிரச்சனை இல்லை. மதிமுகவின் பிரதிநிதி நாளைய (சனிக்கிழமை) மாநாட்டில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளாததால் வைகோ இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. வீண் சர்ச்சைகளை தவிர்க்கவே மாநாட்டில் வைகோ கலந்துகொள்ளவில்லை என்றார்.
பாஜகவிடம் 10 தொகுதிகளை கேட்டு அத்தொகுதிக்கான பட்டியலையும் மதிமுக கொடுத்துள்ளதாம். தற்போது பாமக, தேமுதிக ஆகியவை கூடுதல் இடங்கள் கேட்பதால், மதிமுகவுக்கு கொடுக்க வேண்டிய இடங்களை குறைப்பதால்தான் வைகோ, வண்டலூரில் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள தயங்குகிறாராம்.