சிறையிலிருந்து தப்பி 37 ஆண்டுகளின் பின்னர் சிக்கிய பெண்
மிசிக்கன் சிறையிலிருந்து 1977 ஆம் ஆண்டு தப்பிய ஜுடி லைன் ஹைமன் என்ற பெண் சன்டியாகோ பொலிஸா ரினால் கடந்த திங்கட்கிழமை பிடி பட்டார். குறித்த பெண் சிறைக்கைதியாக இருந்த போது பிடிபட்ட புகைப்பட அடையாளத்தை வைத்தே
பொலிஸ் அதிகாரிகள் குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ஆடைகளைத் திருடிய குற்றத்திற்காக இந்தப் பெண்ணுக்கு 1977ஆம் ஆண்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதில் அவர் எஞ்சிய 18 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி இருப்பதாக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.