எனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்: ஸ்மிருதி ராணி
இந்தநிலையில் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் பட்டப்படிப்பை தாண்டாதவர் என சர்ச்சையை தொடங்கி வைத்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்
ஆனால் ஸ்மிருதி ராணிக்கு ஆதரவாக பேசிய பா.ஜ.கவின் உமா பார்தி, ஸ்மிருதி இராணியின் கல்வித்தகுதி பற்றி கேள்வி எழுப்புபவர்கள் முதலில் என் கேள்விக்கு பதில் அளிக்கட்டும். சோனியா காந்தியின் கல்வித்தகுதி என்ன அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தலைமையேற்று வழி நடத்தியிருக்கிறார். அவருடைய சான்றிதழை நான் பார்க்க விரும்புகிறேன். அதன்பின்னர் ஸ்மிருதி இராணியை கேள்வி கேட்பதற்கான உரிமை காங்கிரஸ் கட்சியினருக்கு உண்டு என்றார்.
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது வலைத்தளத்தில் “சுரங்கத்துறை அமைச்சர் சுரங்கத்தொழிலாளியாக பணியாற்றி இருக்கவேண்டுமா? விமானத்துறை அமைச்சர் விமானியாக இருக்கவேண்டுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்து பேசிய ஸ்மிருதி ராணி கூறுகையில், எனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும். எனக்கு அளிக்கப்பட்ட துறையில் எனது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்து பின்னர் என்னை குறித்து எந்த முடிவும் செய்ய வேண்டும். எனது பணியை ஒழுங்காக செய்ய விடாமல் தடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. என்னுடைய பணிகளில் இருந்து என்னை திசை திருப்புவதற்காக தொடர்பில்லாத பிரச்சனை உருவாக்கப்படுகிறது. என்னுடைய பணியின் அடிப்படையில் என்னை மதிப்பிடுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.