
ஐ பி சி தமிழன் நினைவேந்தல் நிகழ்வு
உலகத்தமிழ் மக்களால் நன்கறியப்பட்ட ஐ.பி.சி (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலிக்காகப் பணியாற்றி உயிர் நீத்த ஊடகவியலாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை
(31-05-2014) இடம்பெறவுள்ளது. ஐ.பி.சி தமிழின் யாழ்ப்பாணச் செய்தியாளராகக் கடமையாற்றிய மயில்வாகனம் நிமலராஜன், மட்டக்களப்புச் செய்தியாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன், மாமனிதர் தராக்கி சிவராம், நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மாமனிதர் என்.எஸ்.மூர்த்தி, ஒலிபரப்பாளர் கௌசி ரவிசங்கர் ஆகியோரது நினைவாகவே இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |