“""இங்கே கிளுகிளுப்பா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணணும். அதை இன்டர்நெட்ல விளம்பரப்படுத்தணும். சென்னைல இருக்கிற பணக்காரப் பசங்க கார்ல வருவாங்க. பக்காவா பண்ணுனோம்னு வச்சுக்க. இந்த சீசன்லயே கோடிக்கணக்குல சம்பாதிச்சிடலாம்...''’’
கொடைக்கானல் -பூம்பாறையில் ரிசார்ட்ஸ் நடத்தும் போதிசாத் விக்நாத்தும் அவனது நண்பன் சிவாவும் திட்டமிட்டு காரியத்தில் இறங்கினார்கள். மே 17-ஆம் தேதி என நாள் குறித்து, ‘"எலக்ட்ரிக் ஃபாரஸ்ட் 2014-கொடைக் கானல்'’ என்று பெயரிட்டார்கள். அடர்ந்த ஆழமான காட்டுக்குள்ளே... மாயத்தோற்றமாக வெளிப்படும் நியான் விளக்குகளின் வெளிச்சத் தில், பேரிரைச்சலாய் ஒலிக்கும் இசையின் பின்னணியில் அளவில்லாமல் மது அருந்தி ஆண்களும், பெண்களும் கும்மாளம் போட லாம். தனியாக வரும் ஆண் என்றால் கட்ட ணம் ரூ.3888. ஜோடி என்றால் ரூ.5888. இரவு 7 மணிக்கு மேல் ஆரம்பிக்கிறது இந்தக் கவர்ச்சித் திருவிழா...’என்று இன்டர்நெட்டில் விளம்பரப்படுத்தி னார்கள்.
எதிர்பார்த்தது போலவே இளசுகள் குவிய... 17-ஆம் தேதி கவர்ச்சித் திருவிழாவை அரங்கேற்றி னார்கள். ரிசார்ட்ஸுக்கு முன்பாக உள்ள திறந்த வெளியில், ஒளி வெள்ளத்தில் ஆண்களும் பெண்களும் போதை ஏற்றியபடியே ஆடினார்கள். ஒருவருக் கொருவர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டார்கள். உச்சக்கட்டமாக, மூன்று பெண்கள் நிர்வாண நிலைக்கு வந்துவிட... இளைஞர்கள் வேகமெடுத்து ஆடினார்கள்.
"அய்யா... இங்கே கிளப் இந்தியா ரிசார்ட்ஸுல குடிச்சிப்புட்டு ட்ரெஸ் இல்லாம ஆடிக்கிட்டிருக் காங்க. உடனே வந்து நடவடிக்கை எடுங்க'’என்று பூம்பாறை கிராமத்திலிருந்து ஒருவர் தகவல் கொடுக்க... நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் டி.எஸ்.பி. மோகன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட காக்கிகள் டீம், அந்த ரிசார்ட்ஸை சுற்றி வளைத்தது. ரிசார்ட்ஸ் உரிமையாளர் ராஜு, அவரது மகன் போதிசாத் விக்நாத், சினிமாத் துறையைச் சேர்ந்த சிவா, அவரது மனைவி நிவேதிதா, ஸ்மித்தி, ஹரிணி உள்ளிட்ட 28 பேரை அதிரடியாக கைது செய்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், விலை உயர்ந்த 7 சொகுசுக் கார்கள், ரூ.1 கோடி மதிப்புள்ள ஒளி, ஒலிபரப்பு சாதனங்களையும் பறிமுதல் செய்தது.
இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம் பேசினோம்.
""அங்கே போயி... இவங்க போட்ட ஆட்டத்த பார்த்து நாங்களே ஷாக் ஆயிட்டோம். பிடிபட்டதுல ஹரிணிங்கிற கேர்ள் சென்னைல காலேஜ் படிக்குது. ஃப்ரண்ட்ஸோட டூர் போறேன்னு சொல்லிட்டு பாய்ஃப்ரண்ட கூட்டிக்கிட்டு இங்க வந்திருக்கு. நிவேதி தாங்கிறவ சிவாவோட ஒய்ஃப். அவளோட ஃப்ரண்ட் ஸ்மித்தியையும் கூட்டிட்டு வந்திருக்கா. இதுல கொடுமை என்னன்னா... சிவாங்கிறவன் பணத்துக்காக தன்னோட மனைவி நிவேதிதாவையும் அவ ஃப்ரண்டையும் இளைஞர்களோட ஆடவிட்டு ரசிச்சிருக்கான். இந்த ரெண்டு பேரும் சென்னை அண்ணா யுனிவர்சிடியில் படிச்சிட்டு, பெரிய ஐ.டி. கம்பெனில வேலை பார்க்கிறவங்க. படிச்சவங்க பண்ணுற காரியமா இது?
15 நாளைக்கு முன்னாலதான் மெட்ராஸ் ஸ்டீபன் காட்டேஜ், கேரளா ஆறுமுகம் காட்டேஜ்ல பெண்களை வச்சு சுற்றுலா பயணிகளிடம் விபச்சாரம் பண்ணுனாங்கன்னு ஆண்கள் 12 பேர், பெண்கள் 6 பேர்னு அரெஸ்ட் பண்ணுனோம். அந்தக் காட்டேஜுகளுக்கும் சீல் வச்சோம். இப்ப இந்தக் கண்றாவிக் கூத்து...''’என நொந்துகொண்டவர் ""கேம்பயர்ங்கிற பேர்ல விறகுகளைப் போட்டு எரித்து குளிர் காய்ஞ்சுகிட்டே தண்ணியடிக்கிறதும், டான்ஸ் ஆடுறதும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதையும் கண்காணிச்சிக்கிட்டுத்தான் இருக்கோம். இனிமேல் கொடைக்கானல்ல லாட்ஜ்லயோ, காட்டேஜ்லயோ விபச்சாரம் நடந்தால்... எங்கேயாச்சும் இந்த மாதிரி ஆபாச நிகழ்ச்சிகள் நடத்தினால்... விடுதி உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்''’என்று எச்சரித்தார்.
கொடைக்கானல் சமாச்சாரங்கள் குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் காந்திநாதன், நம் நாட்டில் நடந்துவரும் சைபர் குற்றங்களை அலசினார். ""ரொம்பவும் சிம்பிளா இன்டர்நெட்ல போட்டு எல்லா தப்பும் பண்ணுறாங்க. வெப்சைட்ல பாலியல் தொடர்பான விஷ யங்களை எப்போதும் தேடிக்கிட்டி ருக்கவங்க நெறய பேரு இருக்காங்க. இவங்கள குறிவச்சுத்தான் பலான தொழில் நடந்துக்கிட்டிருக்கு''’என்றவர் தனது லேப்டாப்பை தட்டிவிட்டு நம் பக்கம் திருப்பினார்.
""இங்கே நீங்க பார்த்தது வெறும் சாம்பிள் தான். இந்த மாதிரி வெப்சைட் ஆயிரக் கணக் குல இருக்கு. கொடைக்கானல் கவர்ச்சித் திருவிழா குறித்த விளம்பரங்களை மே 4-ஆம் தேதியே குறிப்பிட்ட சில இணையதளங்களில் போஸ்ட் பண்ணிட்டாங்க. சைபர் க்ரைம் போலீஸ் உஷாரா இருந்திருந்தால்... ஆட்டம் போடறதுக்கு முன்பே இதை தடுத்திருக்க முடியும். அதைச் செய்யலியே..?''’என்று ஆதங் கப்பட்டார் காந்திநாதன்.
மதுரை சைபர் க்ரைம் பொறுப்பில் உள்ள சார்பு ஆய்வாளர் கார்த்திக்கிடம் பேசினோம். “""இன்டர்நெட்டுங்கிறது கடல் மாதிரி. யாருக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். தனிப்பட்ட நபருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டு அவர் புகார் அளிக்கும்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த மாதிரி தப்பெல்லாம் எங்கெங்கே நடக்குதுன்னு சைபர் க்ரைம் போலீஸ் நெட்ல தேடிக்கிட்டிருக்க முடியாது. போலீஸுக்கு நெறய வேலை இருக்கு. இப்பல்லாம் பாம் வச்சிருக் கோம்னு அடிக்கடி மிரட்டல் வருது. அந்த இடத் துக்குப் போயி தேடிப் பார்த்தால் பாம் எதுவும் இருக்காது. நெட்ல போட்டிருக்கிற எல்லாத்தை யும் உண்மைன்னு நம்பி போயிற முடியாது. கொடைக்கானல்ல மட்டுமில்ல... பெரிய லாட்ஜு கள்ல, பெரிய... பெரிய ஹோட்டல்கள்ல இது நடக் கத்தான் செய்யுது. வெளிப்படையா இது தெரிஞ்சு பப்ளிக் கிட்டயிருந்து கம்ப்ளைன்ட் வரும்போது தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குது''’என்றார்.
உண்மைதானா என்றறிய வலைப்பக்கம் ஒன் றில் பலான அழைப்பு விடுத்திருந்த சூர்யா என்பவ னை தொடர்புகொண்டோம். "நீங்க எங்க இடத் துக்கு வர்றீங்களா? நாங்க உங்க இடத்துக்கு அனுப்பி வைக்கணுமா? ரேட் மூவாயிரம்'’என்றான்.
போலீஸ் ஆபீஸர்ஸ் இந்தப் பக்கமும் பார்வையைத் திருப்பலாமே!
-சி.என்.இராமகிருஷ்ணன் & சக்தி
காக்கிகளின் ஆசியோடு...!
விராலிமலை பெண் ஒருவரின் வீட்டுக்கு வந்து காரியத்தை முடித்த வாடிக்கையாளர் ஒருவர் பணத்துக்கு பதிலாக செக் கொடுத்திருக்கிறார். வங்கியில் பணம் இல்லாததால், செக் திரும்பிவிட்டது. அந்த நபரிடம் பணத்தைப் பெறமுடியாத நிலையில், காவல் நிலையம் சென்று அவள் முறையிட்டிருக்கிறாள். அப்போது அவள் அழகில் மயங்கிய இன்ஸ்பெக்டர், அவளோடு நிரந்தரமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு அவளது கணவன் எதிர்ப்பு தெரிவிக்க... அவன் மேல் சில வழக்குகளைப் போட்டு கம்பி எண்ண வைத்துவிட்டார். மாமூல் பெற்று வரும் இன்ஸ்பெக்டரின் ஆசியோடு, திருச்சிவரை தனது தொழிலை அவள் விரிவுபடுத்தி விட்டாள். இதே விராலிமலை போலீஸ் குவார்ட்டர்ஸிலிருந்து, தொழில் செய்யும் பெண் ஒருத்தி போதையில் நிர்வாணமாக ஓடி பலரும் முகம் சுளித்த சம்பவம்கூட நடந்திருக்கிறது. பலான தொழில் எங்கெல்லாம் நடக்கிறது என்பது காக்கிகளுக்கு நன்றாகத் தெரியும். தொழில் பெண்களிடம் மாமூல் பெற்று வரும் போலீஸ், கணக்கு காட்டுவதற்காக எப்போதாவது வழக்கு பதிவு செய்யும் நடைமுறையே இருந்து வருகிறது.
|