அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் சரிதா. இவர்
இந்நிலையில், மறுநாள் (9ஆம் தேதி) காலை 8 மணிக்கு டாக்டர்கள் அறைக்கு சென்ற நர்சுகள், சரிதா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்த வந்த காவல்துறையினர், இது தொடர்பாக வார்டு உதவியாளர் கிரு மெக் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சரிதாவை கொலை செய்ததை வார்டு உதவியாளர் கிரு மெக் ஒப்புக்கொண்டார்.
மேலும், சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் அவன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சரிதா, இதே கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தன்னோடு பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
கொலை செய்யப்பட்ட சரிதா, இதே கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தன்னோடு பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.