ஈராக்கில் ஒன்றாக பிணைத்து கொல்லப்பட்ட 50 உடல்கள் மீட்பு
ஹில்லா நகரில் இருந்து தென் கிழக்காக 30 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் ஹம்ஸா அல் கர்பி பகுதியில் ஒன்றாக பிணைத்து கட்டப்பட்டு தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கி காயங் களுடன் இந்த உடல்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. எனினும் கொல்லப்பட் டவர்கள் யார் மற்றும் ஏன் கொல் லப்பட்டார்கள் என்பது பற்றி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட் டது பிரதான 'pயா பகுதி என்ப தோடு இங்கு சுன்னி கிளர்ச்சியாளர் களின் நடமாட்டமும் இல்லை என் பது குறிப்பிடத்தக்கது. சுன்னி கிளர்ச் சியாளர்கள் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கில் பெரும் நிலப்பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். ஈராக்கில் சிவில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்த 2006 மற்றும் 2007 காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உடல்கள் நாளாந்தம் வீதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.