பா.ஜ.க வின் புதிய தலைவராக மோடியின் நண்பர் ஷா நியமனம்

மோடியின் நண்பரான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை அமைச்சர் பதவி கிடைத்ததால் அமித் ஷா ஆளுங்கட்சியான
பா.ஜ.கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமித் ஷா ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பெரும் வெற்றிக்கு அமித்
ஷா முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார்.
மேலும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் கிடைத்த பாரிய வெற்றியின் பின்னணியில் அமித் ஷா இருப்பதால் அவருக்கு இப்பதவி கிடைத்திருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.