சோமாலியாவில் அல் 'பாப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு
போராளிகள் அடுத்த 45
தினங்களுக்குள் சரணடைந்தால் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள் என்று அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல் 'பாபிற்கு ஏற்பட்ட பாதிப்பை அரசு பயன்படுத்த முயற்சிப்பதாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. எனினும் அமெரிக்க தாக்குதலில் அல் 'பாப் தலைவர் அஹமத் அப்தி கொடான் உயிர்தப்பினாரா என்பது குறித்து அறிவிப்பதை அந்த அமைப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.
தெற்கு சோமாலியாவின் n'பல்லா பிராந்தியத்தில் கொடான் பயணித்த வாகனத் தொடரணி மீது கடந்த திங்கட்கிழமை வான் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இதன்போது தாக்குதல் நடத்திய பகுதிக்கு தரையிறங்கிய அமெரிக்கப்படை துப்பாக்கிச் சண்டைக்கு பின் தக்குதலில் கொல்லப்பட்டவர்களது உடல்களை எடுத்துச் சென்றதாக சம்பவத்தை பார்த்தோர் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தாக்குதலில் தமது ஆறு போராளிகள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருக்கும் அல் 'பாப் பேச்சாளர் அபு+ மொஹமத் பாதிக்கப்பட்டவர்களில் அல் 'பாப் தலைவர் இருக்கிறாரா என்பதை கூற மறுத்துவிட்டார்.