ஆண்டின் முதற்தர கிரிக்கெட் வீரராக மெத்யு+ஸ் தெரிவு
அண்மையில் இலங்கை கிரிக் கெட் மற்றும் டயலொக் நிறுவனத் தால் மேற்கொள்ளப்பட்ட பலவித மான தேர்வுகளின் அடிப்படையில் டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர், சர்வதேச
ஒரு நாள் போட்டி யின் துடுப்பாட்ட வீரர், மற்றும் சகல துறை வீரராக மெத்யு+ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், டெஸ்ட் போட்டி சிறந்த துடுப்பாட்டகாரராக குமார் சங்கக்காரா தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
இருபதுக்கு இருபது போட்டிகளில் சிறந்த தலைவராக இருந்து வெற்றி வழிவகுத்ததன் அடிப்படையில் லசித் மலிங்க மேலும் ஒரு விருதுக் காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்கிடையில் இடம்பெற்ற சர்வதேச போட்டிகளின் அடிப்படையில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சமரி அத்தபத்துவும், துடுப் பாட்ட வீரர் மற்றும் சகல துறை ஆட்ட வீரராக சசிகலா சிறிவர்த்தன, தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுடன் பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீர ராக நிரோ'ன் டிக் வெல, பந்து வீச்சாள ராக நிலங்க பிரேம ரத்ன, சகலதுறை ஆட்டக்காரராக சசித் பதிரன தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.
23 வயதிற்குட்பட்ட வீரர் கள் தரவரிசைப்படுத்தலில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ருமேஷ் புத்திக, பந்து வீச்சாளர் டிலங்க ஒவேர்ட், சகலதுறை ஆட்ட வீரராக கே.பி. கஜசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கும் நிகழ்வுõ கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதியில் இடம் பெற்ற போட்டிகளில் திறமைகாட்டிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌர விக்கப்பட்டனர்.