ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பதற்றமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பது தொடர்பான அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய தேசிய ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர்.
எனினும் அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டதாக அரச தொலைக்காட்சிகளின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய,மிக நீண்ட நேரம் இந்த இரு அரச தொலைக்காட்சிகளின் தயாரிப்பாளர்கள் குழுவும் காத்திருந்தனர். இறுதியில் தான் சுகவீனமுற்று இருப்பதாகவும் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஜனாதிபதியே அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.