இந்த நிலையில், இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பலரும் தங்களது பெயரில் எந்த வெளிநாட்டு வங்கியிலும் ரகசிய கணக்குகள் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர், உலகில் உள்ள எந்த நாடுகளிலும் முகேஷ் அம்பானியின் பெயரில் சட்டவிரோதமான வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
அனில் அம்பானியின் சார்பில் விளக்கம் அளித்த அவரது செய்தி தொடர்பாளரும், அனில் அம்பானிக்கு எச்.எஸ்.பி.சி. வங்கியின் எந்த வெளிநாட்டு கிளைகளிலும் கணக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.