Kirthika Tharan shared Makizhini Saravanan's post.
நண்பர்கள் வாழ்த்துகள்.

Makizhini Saravanan
எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
few minutes எடுத்துக்கிறேன்.
few minutes எடுத்துக்கிறேன்.
இரவு 11 மணிக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வேண்டுகோள் 5000 நாப்கின்ஸ் 100 பிளாங்கெட்ஸ் நாளைக்கு அவசரமா மதுரவாயல் பகுதிக்கு வேணும்..முடியுமா..
அவர் யாருன்னு தெரியாது.
அவர் யாருன்னு தெரியாது.
அதை உடனே பதிவாக போடுகிறேன்.
5 நிமிடத்தில் டெல்லியிலிருந்து ஒரு தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ் அப் செய்தி..
எவ்வளவு நாப்கின்ஸ் வேண்டுமானாலும் சென்னை நண்பர்களிடம் சொல்லி தயார் செய்கிறேன் என்று நெட்வொர்க் சிதைந்த நிலையிலும் முயற்சி செய்து செய்து பேசி உறுதிப் படுத்திய டெல்லி துர்கா அவர்களை யாரென்றே தெரியாது.காலையில் அந்த உதவி கிடைத்து விட்டது..இங்கிருந்து அதைப் பொறுப்பாக வாங்கிக் கொடுத்த நண்பர்களையும் தெரியாது.

பஷீர் சார் Basheer JJ அரபு நாட்டிலிருந்து 5000 உணவுப் பொட்டலங்கள் நாப்கின்ஸ் பிஸ்கட்டுடன் வியாசர்பாடியில் அவரது நண்பருக்கு போட் கிடைக்க அங்கிருந்தே இரவு முழுக்க தொடர்ந்து முயற்சிக்கிறார்.
சுபா Subha D முடிச்சூரில் நீர் நிலைமை மோசமாக இருந்தும் கூட களப்பணியில் ஒருங்கிணைக்கிறார்.
ஷாரா சித்தாராவும் Shara Sithara மனுஷியும் manushi bharathi சதீஸ் குமாரும் விடிய விடிய உறஙாகாமல் கடலூருக்காக ஒருங்கிணைப்பு உதவிகளில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நியூஸ் 7 செந்தில் சாரின் Senthil Vel நட்பைப் பற்றி பிறகு பேசுகிறேன் ஒரு ஊடகவியலாளர் எபாபடி இருக்க வேண்டும் என்ன மாதிரியான பார்வை வேண்டும் என்பதை செந்தில் சார் மூலமாக நிறைய கற்றுக கொண்டிருக்கிறேன். இரவு கோடம்பாக்கத்தில் மாற்றுத் திறனாளிகள் ஹாஸ்டலில் நீர் புகுந்ததை அறிந்து பதறி தன் வீட்டில் நுழைந்த தண்ணீருடனே போராடிக் கொண்டே அவர்களுக்கு பாதுகாப்பு பெற்று தந்திருக்கிறார்.
தம்பி கார்த்திக் புகழேந்தி பற்றியெல்லாம் இப்போது சொல்லவே மாட்டேன்.பின்பு நிறைய எழுத வேண்டி இருக்கிறது..எழுதுகிறவன் யதார்த்த வாழ்விலும் சமூகப் பொறுப்புடன் இருப்பதற்கு என் கண்ணெதிர் சாட்சி அவன்.
கிருத்திகா தரண் Kirthika Tharan ஒரு சிறந்த திறமையான கலெக்டர் எப்படி செயல்பட வேண்டுமோ அதைவிடவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
நித்யா அக்கா Nithya Kandaswamy வெளிநாட்டில் இருக்கிறார்.
இங்கு அவருடைய சென்னை வீட்டை தோழிகள் மூலம் திறக்கச் சொல்லி உணவுப் பொட்டலங்களும் உதவிகளும் பெருமளவில் தயாராகின்றன.அக்காவுக்கு மனசெல்லாம் இங்கு தான் இருக்கும்.இப்போது #வடசென்னை_நித்யா என்ற ஹேஸ்டேக்கில் இயங்குகிறார் வெளிநாட்டிலிருந்தே.

இதேபோல எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஆயிரமாயிரம் குழுக்கள் ஆயிரமாயிரம் நண்பர்கள் கண்ணுக்கு தெரியாத அன்பு நெஞ்சங்கள்..
எனக்குப் புரியவேயில்லை..இவ்வளவு வலிமை வாய்ந்ததா இந்த சமூக ஊடகம்..கழுத்தளவு நீரில் குழந்தைகளுடன் இருந்த குடும்பத்தை போட் சர்வீஸை நபர்களைப் பிடித்து அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள் என்று தம்பி கார்த்திக் கொடுத்த நள்ளிரவுச் செய்தியில் சத்தியமாக கண்கள் பெருக்கெடுத்து அழுதேன்.
இணைய இணைப்புகளை விடவும் வலிமையான நுண்ணிய அன்பின் இணைப்புகளை நமக்குள் தான் பொத்தி வைத்திருக்கிறோமா..
நெகிழ்வும் அன்பும் ததும்புகிறது.
இந்த பூமியை இப்படியே அன்பால் சுழற்றுவோம் நண்பர்களே..
டான் அசோக் பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு சொல் என்னை இழுத்துப் பிடித்தது.மயான வைராக்கியம் என்று.
இந்த அன்பெனும் நுண்ணிய உணர்வை மயான வைராக்கியமாய் இல்லாமல் வாழ்வின் அங்கமாக கட்டமைத்துக் கொள்வோம் நண்பர்களே..
இந்த அன்பெனும் நுண்ணிய உணர்வை மயான வைராக்கியமாய் இல்லாமல் வாழ்வின் அங்கமாக கட்டமைத்துக் கொள்வோம் நண்பர்களே..
சில ப்ராஜெக்ட் எடுப்பதற்கு இப்போதெல்லாம் N.G.O வழியாக விண்ணப்பிக்கச் சொல்லி மத்திய அரசு விதிகள் இருக்கிறது..அது சம்பந்தமாக மணியிடம் சொன்னேன்.அவரும் எனக்கும் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது அந்த விவரங்களை அனுப்புங்கள் என்றார்.
என்னால் நம்ப முடியவில்லை விருட்சமென வளர்ந்திருக்கிறது நிசப்தம் டிரஸ்ட்.எல்லோரும் பயத்தை அழிவை மேலும் மேலும் பதிவு செய்து கொண்டிருந்த போது யாரெல்லாம் எந்த இடமெல்லாம் safe zone என்று பகுதி வாரியாக விசாரித்து உறுதிப் படுத்தி பதிவிட்டார்..வெளியூரிலிருந்து பதறிக் கொண்டிருந்தவர்களுக்கு அது நிம்மதியைக் கொடுத்தது.இதோ இப்போதும் நிசப்தம் மூலம் பெரும் உதவிகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்.எனக்கு கம்யூனிசப் புரட்சியின் மீது பெரும் நம்பிக்கை இருந்தது இருக்கிறது.எல்லோருக்கும் எல்லாம் என்பது என்ன சாதாரணமான தத்துவமா..மனித மாண்பின் உச்சம் அது..என் காலத்திற்குள் எல்லாம் அது கனவுதான்..ஆனால் நிசப்தத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஒன்றே ஒன்று தான் தோன்றுகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிசப்தம் போலொரு முயற்சியை தொடங்க வேண்டும் அவ்வளவு தான்.

ஒரு அரசு செய்ய வேண்டிய ஒட்டுமொத்த நிவாரணப் பணிகளையும் இவரே முழுக்க களத்திலிருந்து செய்தது போல் ஒரு உணர்வு எல்லோருக்கும் வந்திருக்கும்.
உமா மகேசுவரன் லாவோட்சு.. மக்களை மீட்டதில் பெரும் பங்கு அவருக்கு இருக்கிறது.
உமா மகேசுவரன் லாவோட்சு.. மக்களை மீட்டதில் பெரும் பங்கு அவருக்கு இருக்கிறது.
பெரும் துயரங்கள் நிகழும் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் என்ன செய்வதென தெரியாது எப்படி களப்பணி ஆற்றுவதெனப் புரியாது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்..
இந்த நிலையில் Shah Jahan ஷாஜகான் சாரின் ஆளுமைத்தன்மை வாய்ந்த உதவியை நாம் எதிர்பார்த்திருக்கவே முடியாது.
இந்த நிலையில் Shah Jahan ஷாஜகான் சாரின் ஆளுமைத்தன்மை வாய்ந்த உதவியை நாம் எதிர்பார்த்திருக்கவே முடியாது.
சுங்கச்சாவடி கட்டணத்தை டிசம்பர் 11 வரை நீக்கியது.
ரெயில்வேயில் இருந்து ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள்
இலவச ரயில்
என்று மத்திய அரசின் அறிவிப்பகளுக்குப் பின்னால் இயங்கும் தனியொருவன ஷாஜகான் சார்.இப்போது இலவச மொபைல் கழிப்பறைகளுக்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
வெளியூரிலிருந்து Erode Kathir சார் இயங்கிக் கொண்டிருக்கும் விதம் அளப்பரியது.
எவ்வளவோ பேர் எனக்குத் தெரிந்தவர்களே நிறைய விடுபட்டிருக்கின்றனர்..
இன்னும் இன்னும் இன்னும் லட்சக்கணக்கான முகமறியாத ஈர நெஞ்சங்கள்..
இந்த பேரன்பை அடுத்த வெயிலில் உலர விட்டு விடாமல் இந்தப் பூமியின் கடைசி மூச்சு வரை பத்திரப் படுத்தி வைப்போம் நண்பர்களே..
இந்த பேரன்பை அடுத்த வெயிலில் உலர விட்டு விடாமல் இந்தப் பூமியின் கடைசி மூச்சு வரை பத்திரப் படுத்தி வைப்போம் நண்பர்களே..
பிறகு விரிவாகப் பேசுவோம்.
அன்பின் வழியது உயிர்நிலை.