இருபது நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வரும் நிலையில்,
அவர் கவனித்துவந்த இலாகா தொடர்பான பணிகள் அனைத்தையும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கீடு செய்து நிர்வாகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ்.
டெல்லியில் நடந்த நள்ளிரவு ஆலோசனை
அப்போது நடந்த தீவிர ஆலோசனையில், ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அப்பல்லோ சென்ற ராகுல்காந்தி "அ.தி.மு.க.வின் அரசியல் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் ஆதரவாக நிற்கும்' என சொல்லியதை சீரியஸாக விவாதித்திருக்கிறார் கள். தமிழக அரசியலில் மத்திய அரசின் மறைமுக தலையீடு குறித்து ஜனாதிபதி மூலமாக சில கேள்விகளை காங்கிரஸ் கட்சி எழுப்பினால் அது நமக்கு தர்மசங்கடமாகலாம். அப்படிப்பட்ட நிலை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டிருக் கிறது. இதனையடுத்துதான், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலையில் கவர்னர் இருப்பதால் அவருக்கு தெளிவான ஒரு வரையறையை கொடுத் தாக வேண்டும். அதனால், அரசியலமைப்புச்சட்ட விதி 166, பிரிவு 3-ன் படி செயல்படச் சொல்லலாம் என முடிவெடுத்து அதன்படி வித்யாசாகர்ராவுக்கு அறிவுறுத்தியது பிரதமர் அலுவலகம் என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்.
இதனை 11-ந்தேதி காலையில் தலைமைச் செயலாளர் ராமமோகனராவுக்கு தெரிவிக்கிறார் கவர்னரின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா. இதனைத்தொடர்ந்து, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மூலமாக சசிகலாவுக்கு தெரிவிக்கப் படுகிறது. அப்பல்லோவில் இரண்டாவது மாடியில் நிறைய ஆலோசனைகள் நடந்தன. முடிவில், முதல்வர் ஜெயலலிதா, ஓ.பி.எஸ்.சை தேர்வு செய்ததாக கவர்னர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அதனை ஏற்று ஜெயலலிதாவின் இலாகாக்களை ஓ.பி.எஸ்.க்கு ஒதுக்கீடு செய்து 11-ந்தேதி இரவு உத்தரவு பிறப்பித்தார் கவர்னரின் பெயரில் அவரது செக்ரட்டரி ரமேஷ்சந்த் மீனா.
இலாகா இல்லாத முதல்வரும் அறிவிக்கப்படாத முதல்வரும்
ஓ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்ட பின்னணி குறித்து கோட்டை அதிகாரிகளிடம் நாம்