.jpg)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழில் டுவிட்டர் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், “திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை சந்தித்தமையிட்டு மகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம், மாகாண சபைகளின் வகிபாகம் ஆகியவை குறித்து கலந்துரையாடினோம்.” என்று குறிப்பிடடுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஆகியோரையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)