![]() அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், டொலரின் விற்பனை விலை 315 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது. அதன் கொள்வனவு விலை 307 ரூபா 50 சதமாக அமைந்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 4 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளது. |