அவர்கள் அனைவரும் பிரித்தானிய எல்லைப் படைக்கப்பல்களால் கால்வாயைக் கடந்து, மீட்கப்பட்ட பின்னர் டோவர் துறைமுகத்திற்கு திங்களன்று வந்தடைந்துள்ளனர். இந்த வழியில் இந்த ஆண்டு மட்டும் 14,232 புலம்பெயர்ந்தோர் 283 படகுகளில் வந்துள்ளனர். ஜூலை மாதத்தில் சுமார் 843 பேர் வந்துள்ளனர். சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்க முற்படும் மக்களை மீட்க, பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய கப்பல்கள் ஒத்துழைக்கும் ஒரு பாரிய நடவடிக்கை அனைத்து நாட்களிலும் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. |