புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2024

பிரான்சில் அவசர அவசரமாக உருவான புதிய கூட்டணி!

www.pungudutivuswiss.com

பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக இடதுசாரிக் கூட்டணி ஒன்றை அமைத்தன. ஆனால், இதுவரை யாரும் ஆட்சி அமைக்கவில்லை! பிரான்சில் வலதுசாரிக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, இடதுசாரிக்கட்சிகள் இணைந்து அவசர அவசரமாக உருவாக்கிய கூட்டணி The New Popular Front (NPF).

அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே வலதுசாரிக் கட்சிகளை மூன்றாவது இடத்துக்கு தள்ளியும் விட்டார்கள். ஆனால், அவர்கள் வென்றது 188 இருக்கைகளைத்தான்.

ஒரு கட்சி பெரும்பான்மை பெறவேண்டுமானால், அது 289 இருக்கைகளைக் கைப்பற்றவேண்டும்.

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 7ஆம் திகதி, இன்னும் சில நாட்களில் அரசு அமைக்க இருப்பதாகவும், பிரதமர் யார் என்பதை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் Socialist கட்சியின் தலைவரான Olivier Faure.

ஆனால் இன்று 15ஆம் திகதி ஆகியும், யாரும் ஆட்சி அமைக்கவும் இல்லை, பிரதமர் யார் என அறிவிக்கவும் இல்லை.

இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தங்களை குடியரசுவாதக் கட்சிகள் என கருதும் கட்சிகள் அனைத்தும் இணைந்து, தீவிரக் கொள்கைகள் கொண்ட கட்சிகளை ஓரங்கட்டும் வகையில், புதிய கூட்டணி ஒன்றை அமைக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மொத்தத்தில், பிரான்சில் தேர்தல் முடிந்தும், அரசு அமைப்பதில் இன்னமும் இழுபறியே நீடிக்கிறது.

ad

ad