வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்கி இருந்த விடுதி ஒன்றில் குறித்த விரிவுரையாளர் ஆங்கில வகுப்பு ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, அரசு ஊழியரான பாதிக்கப்பட்ட யுவதி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார், அப்போது விரிவுரையாளர் வகுப்பை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு சென்று குளியலறையின் ஜன்னல் வழியாக யுவதி குளிப்பதை தன் கையடக்கத் தொலைபேசியூடாக வீடியோ எடுத்துள்ளார். குளித்துக்கொண்டிருந்த யுவதி , குளியலறையின் ஜன்னலிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று தெரிவதை கண்டு பயந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார் . பின்னர் ஆங்கில விரிவுரையாளர் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் , இதுகுறித்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, விரிவுரையாளர் குளியலறை அருகே நின்று வீடியோ பதிவு செய்வதை அதில் காணொளியாக பதிவாகியுள்ளது . மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த யுவதிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். |