-

18 டிச., 2025

அனுர கேணல் O.R. ராஜசிங்கே என்கிற இராணுவ அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக (Auditor General) நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருக்கின்றார்

www.pungudutivuswiss.com
கோத்தபாயா ராஜபக்சே தொடர்ச்சியாக பொது நிருவாகத்தை
இராணுவமயப்படுத்திய போதும் பாராளமன்றத்திற்கு நேரடியாக

அறிக்கையிடும் சுயாதீனமான நிறுவனமான கணக்காய்வாளர் திணைக்களத்தில் (Auditor General’s Department) கைவைக்கவில்லை
ஆனால் பொதுத்துறை கணக்காய்வு தொடர்பான அனுபவம் (Public Sector Auditing), பொது நிதிச் சட்டம் குறித்த அறிவு (Public Financial Law), சுயாதீனமாக இயங்க கூடிய ஆற்றல் (Ability to Function Independently) என எந்த பின்னணியும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரியை தீவின் மிக பிரதான Oversight நிறுவனத்தின் தலைமை பதவிக்கு பரிந்துரைத்திருக்கின்றார்
குறிப்பாக இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் தொடர்ச்சியாக இலங்கை இராணுவ கட்டமைப்பின் நிதி விரயம், மோசமான நிதி முகாமைத்துவம், ஊழல் மோசடிகள் பற்றி அறிக்கையிட்டு வந்த நிலையில் குறித்த நிறுவனத்திற்கே இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரை தலைவராக நியமிக்க திரு அனுரா குமார திஸநாயக்க முயற்சிக்கின்றார்
விசேடமாக இலங்கை இராணுவத்தின் உள்ளக கணக்காய்வாளராக கேணல் O.R. ராஜசிங்கே பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த பலவீனமான சொத்து முகாமைத்துவம் (Poor Asset Management), அலட்சியமான நிதி கட்டுப்பாடுகள் (Weak Financial Controls), வேகமற்ற நடவடிக்கைகள் (Slow or Inadequate Action) என பல்வேறு விடயங்களை 2024 ஆம் ஆண்டு கணக்காய்வறிக்கை பதிவு செய்திருக்கின்றது
ஆனால் ஊழலை ஒழிக்க போவதாக பேசும் ஜேவிபி தொடர்ச்சியாக முறையற்ற அரச சார்பான நியமனங்களிலும் நிர்வாக கட்டமைப்புகளை இராணுவமயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது
அந்தவகையில் ஏற்கனவே போர்குற்றவாளி மார்ஷல் சம்பத் துயகொண்டாவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்கள்
திருகோணமலை 'கன்சைட்' முகாமில் 11 கொழும்பு இளைஞர்களை கடத்தி கொ*லை செய்த கடற்படை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர் என International Truth and Justice Project அடையாளம் காட்டிய அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்கவை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளார்கள்
இது போதாதென்று கோத்தபாயா ராஜபக்சேவை பின்பற்றி தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களாகவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்திருக்கின்றார்கள்
இதன் தொடர்ச்சியாக நாட்டின் நிதி சுதந்திரம், வெளிப்படைத்தன்மை , மற்றும் நிதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டிய கணக்காய்வாளர் திணைக்களத்தை இராணுவமயமாக்க முயற்சிக்கின்றார்கள்
இந்த அட்டூழியங்களுக்கு மத்தியில் பலவீனமான Financial Capability- Balance of Payment நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக 18 ஆவது தடவையாக IMF யிடம் கடன் வாங்க ஜேவிபி விண்ணப்பித்திருக்கின்றது

ad

ad