""என்னப்பு இது.. வெள்ளை காயிதமா இருக்கு.. பொத்தான்லதான் அமுக்கணும்னு சொன்னாங்க..?''’’ என எதிர்க்கேள்வியுடன் நம்மை வரவேற்றார், ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்த அழகம்மாள். கருத்துக்கணிப்பைப் பற்றி புரியவைப்பதற்கு படாதபாடு பட்டு விட்டோம். ஆரம்பமே அமர்க்களமா? என்றாகிவிட்டது.
திண்ணையிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த இராமேஸ்வரம் அக்ரஹாரம் கிருஷ்ணம்மாள், ""நேத்து ராத்திரி வந்து ஓட்டுப் போடுற அட்டையை வாங்கிட்டு போயிட்டாங் களே. நீங்க யாரு..?'' என அதிர்ச்சியோடு நம்மைப் பார்த்தவர், ""எப்ப காசு தரு வீங்க..? என் ஓட்டு அ.தி.மு.க.வுக்குதான்'' என்றார்.
வீரசோழன் கிராமத்தில் 60 வயதான கரீம், ’""எனக்கு மதவாதம் பிடிக்காது. அதனால தி.மு.க.வுக்குதான் என் ஓட்டு'' என்கிறார் அழுத்தமாக.
அறந்தாங்கி தொகுதியிலும் மறவர்- அகமுடையார் வாக்குகள் பிரிகின்றன. எட்டு சின்னங்கள் கண்டவர் என திருநாவுக்கரசரைப் புகழ் கிறார்கள், அறந்தாங்கியில். இங்கு இந்த முறையும், நீக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை உருவாக்கும் கோரிக் கைக்காக, தேர்தலைப் புறக் கணிக் காமல், அதேசம யம் வாக்கையும் செலுத்தப் போவ தாக கணிசமான வர்கள் கூறினர். கடந்த முறை 49 ஓ, இந்த முறை நோட்டா வாக்கு கள் எண்ணிக் கை அதிகமாக லாம்!
- நா.ஆதித்யா & சர்வே டீம்