இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இரட்டை இலை வாக்காளர்களைப் பொறுத்த மட்டிலும், குறிப்பாக பெண் வாக்காளர்கள் -வேட்பாளர் யாரென்று கூட தெரிந்து வைத்திருக்கவில்லை. மின் வெட்டு, விலைவாசி உயர்வையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. "மிக்ஸி, கிரைண்டர் கொடுத்திருக்காங்க. இதுக்கு மேல என்ன வாம்?'’என்று ஜெ. அரசு தந்த விலையில்லா பொருட்கள் குறித்து பேசுகிறார்கள்.
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் எம்.ஜி.ஆர்., இரட்டை இலை, ஜெயலலிதா மட்டும்தான். நென்மேனி என்ற கிராமத்தில் நாம் சந்தித்த தேவேந்திர குலத்தவரான கவிதா "நானும் ரெட்டை இலைக்குத்தான் ஓட்டு போட்டுக்கிட்டிருந்தேன்.. இனி போட மனசு வராது... ஏன்னா... எப்ப அந்தம்மா எங்களுக்கு எதிரா போச்சோ.... அப்பவே மனசு விட்டுப் போச்சு..’’ என்று ஆதங்கப்பட்டார்.
சிந்தப்பள்ளி என்னும் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் “""வாங்க தம்பிகளா... நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க.. நானும் எதிர்பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன்.. டேய் சீனி.. போயி கலரு வாங்கிட்டு வா...''’’ என்று தன் பேரனை கடைக்கு அனுப்ப.. அச் சிறுவனைப் பிடித்து நிறுத்திய நாம் ""பாட்டி... எங்களை யாருன்னு நினைச்சீங்க.. எலக்ஷன் சர்வே எடுக்க வந்திருக் கோம்''’என்று விளக்கினோம். ""அப்ப நீங்க ரூபா கொண்டு வரலியா?''’என்று பரிதவிப்போடு கேட்டவர் ""அட, நீங்க வேற ஆளுகளா? சரி.. சரி.. பணம் கொடுக்கிறவங்கள சட்டுப்புட்டுனு அனுப்பி வைங்க..''’என்றவாறே கதவைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பினார்.
""பணம் யாரு ரொம்ப கொடுக்கிறாங்களோ.. அவங்களுக் குத்தான் ஓட்டுப் போடுவேன்''’ என்று உறுதியாகச் சொன்னார் புல்லலக்கோட்டை காளியம் மாள்.
""மோடி அலையெல்லாம் இல்லீங்க. இந்த தொகுதில வீசுறது வைகோ அனுதாப அலைதான். போன தடவை தோத்துட்டாருல்ல, அந்த அனுதாபத்துல இந்த தடவை பம்பரத்துக்குத்தான் போடப் போறேன். பாவம்ங்க வைகோ'' என்றார் விருதுநகர் பாஸ்கரன்.
""அது யாருங்க ரத்தின வேலு.. நெறய தொழிலைக் கொண்டு வருவாருன்னு சொல்லுறாங்க.. அந்த நல்ல காரியத்தை அவரு பண்ணட்டும்.. ஓட்டு போட்ருவோம்...''’என்றார் வெம்பக்கோட்டை ஸ்ரீதர்.
""ஜெயிக்கிறோமோ? தோற்கிறோமோ? அது முக்கியம் இல்ல. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு போடற ஒவ்வொரு வாக் காளரும் கொள்கைப் பிடிப்பு உள்ளவங்க. ஊருக்கு ஆயிரம் பேரு இருந்தாலும் ஒட்டுமொத்த மக்கள் பிரச்சினைக்காக எப்பவும் ரோட்டுக்கு வந்து போராடுறது நாங்கதான். நியாயமா பார்த்தா எங்களுக்குத்தான் நெறய ஓட்டு விழணும்''’என்று தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார் அருப்புக்கோட்டை மணி.
""தெருக்குழாய்ல தண்ணி வரல. வாறுகால் சுத்தம் பண்ணுறது இல்ல.. யாருக்கு ஓட்டு போட்டு என்ன ஆகப் போகுது...''’என்று பல இடங்களிலும் மக்கள் புலம்பினார்கள். அந்தக் கோபத்தில் ஒரு சிலர் "நோட்டா'வில் டிக் அடித்தார்கள்.
குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகம் வசிக்கின்ற ஏரியா அது. குடிநீர் தொட்டிகள், சாலை வசதி என அந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி அப்பகுதி மக்களுக்கு நிறையவே செய்து தந்திருக்கிறார். ஆனாலும், அவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஏரியாவாசிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடும் அவரை ஆதரிக்காமல், தங்கள் ஜாதிக்கார வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார்கள். இது அந்த மக்கள் பிரதிநிதிக்கு தெரிந்து விட்டது.
சர்வே எடுத்த ஏரியாவில் தென்பட்ட அந்த மக்கள் பிரதிநிதி “""நான் ஜாதி பார்க்காமல் அந்த மக்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு எவ்வளவோ நல்லது பண்ணி யிருக்கிறேன். அந்த சமுதாயத்தினரோ, எதற்கெடுத்தாலும் ஜாதி பார்க்கின்றவர்களாக இருக்கின்றார்கள். ஆனாலும் எனக்கு இது ஒரு பாடம்.. தேர்ந்தெடுத்த தொகுதிக்கு சேவை செய்ய வேண்டியது நமது கடமை. அதற்கு கைமாறாக தொகுதி மக்கள் நமக்கே வாக்களிப்பார்கள் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. இந்த அனுபவ பாடத்தை பழுத்த அரசியல்வாதிகள் உணர்ந்திருப்பார்களோ என்னவோ? அத னால்தான்.. தங்களது தொகுதி மீது அக்கறை இல்லாத வர்களாகவே பலரும் இருக் கிறார்களோ என்னவோ..?''’’ என்று ஆஃப் த ரெகார்டாக நம்மிடம் வருத்தத்தை வெளிப் படுத்தினார் அந்த மக்கள் பிரதிநிதி.
மக்களின் மனதுக்குள் ஊடுருவ முடிவதாலோ என்ன வோ, சர்வே எடுப்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.