தமிழகத்தில் பல முனைப் போட்டி நிலவுகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் மனநிலை என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என முன்கூட்டியே கண்டறிவது சவாலான பணி. சவால்களை சந்திப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கும் உங்கள் நக்கீரன் இந்த முறையும் தேர்தல் களமிறங்கி மக்களின் கருத்துகளை அறியும் மெகா சர்வேயை மேற் கொண்டது.
நன்றி நக்கீரன்
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள்ளும் உள்ள 6 சட்ட மன்றத் தொகுதிகளிலும் தலா 100 பேரை சந்தித்து இந்த கருத்துக்கணிப் பினை மேற்கொண்டது நக்கீரன் சர்வே டீம். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள நகரங்கள், ஒன்றியங்கள், முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடிய சமுதாயத்தினர், புதிய வாக்காளர்கள் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஆண்களில் 50 பேர், பெண்களில் 50 பேர் என ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மிகத் துல்லியமான கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 300 ஆண்கள், 300 பெண்கள் என 600 பேரிடம் கருத்துக்கணிப்பு எடுத்தோம். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நக்கீரன் சந்தித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரம் பேர்.
ஒவ்வொரு எம்.பி.தொகுதியிலும் போட்டி யிடும் கட்சியினரின் சின்னங்கள் அச்சிடப் பட்ட தனித்தனி சர்வே படிவங்களில் மக்கள் தங்கள் ஆதரவு நிலையை டிக் செய்தனர்.
உதிரிக் கட்சிகள், சுயேட்சை, நோட்டா ஆகியவற்றுக்கான வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பும் நம் படிவத்தில் இருந்தது. வாசகர்
40 எம்.பி. தொகுதி களிலும் மேற்கொள்ளப் பட்ட சர்வே முடிவுகள் அந்தந்த எம்.பி. தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக வெளியிடப் பட்டுள்ளன. இத்தனை விரிவான முடிவுகளை நக்கீரன் மட்டுமே அளிக் கிறது.
இந்த இதழில் இடம் பெறாத தொகுதிகளின் சர்வே முடிவுகள் வரும் செவ்வாயன்று கடைகளில் கிடைக்கும் இதழில் இடம் பெறும்.
வாக்குப்பதிவிற்கு ஏறத் தாழ ஒருவாரகால இடைவெளி இருந்த நிலையில் எடுக்கப் பட்ட சர்வே இது. கள நில வரத்தை இது சரியாகப் பிரதிபலித்தாலும் பண விநியோகம் உள்ளிட்ட கடைசி நேர செயல்பாடுகளால் நெருக்கமான போட்டி உள்ள ஒருசில தொகுதிகளின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை 2004-ல் நாற்பதுக்கு நாற்பதும் எந்த அணிக்குக் கிடைக்கும் என் பதை மிகத்துல்லிய மாக சர்வே மூலம் சொன்னது உங்கள் நக்கீரன்தான். அது போலவே, கடந்த 2009 எம்.பி. தேர்தலிலும் தி.மு.க அணிக்கு 28 இடங்கள், அ.தி. மு.கவுக்கு 12 இடங்கள் எனத் துல்லியமாகச் சொன்னதும் உங்கள் நக்கீரன்தான். அதே அடிப்படையில் இம் முறையும் அக்கறையுட னும் அறிவியல்பூர்வ மாகவும் 40 தொகுதிகளிலும் சர்வே மேற்கொள்ளப்பட் டது. மக்களின் மனநிலை யை வெளிப்படுத்தும் அந்த முடிவுகளை இங்கே வெளியிடுகிறோம்.