-

10 டிச., 2025

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இரு யாழ்ப்பாண வீரர்கள்! [Wednesday 2025-12-10 07:00]

www.pungudutivuswiss.com


19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

இதன்படி, யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் குகதாஸ் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரியின் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை அணி ஐக்கிய அமீரகத்திற்கு பயணிக்கவுள்ளது. இலங்கை அணி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷூடன் குழு பி இல் இடம்பெற்றுள்ளதுடன், முதல் போட்டியில் 13ஆம் திகதி நேபாள அணிக்கு எதிராக விளையாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ad

ad