புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2009

சு.வி.கவிதை 2


.




பூக்களை உரசும் காற்றின் சுகந்தங்கள்,காலத்தோடு கரைந்து சிதைவுகளுள் ஒளிந்து கொண்டவாழ்வினைத் தேடிமனிதர்கள் வீறு கொண்டெழத் தொடங்கி விட்டனர்.ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி,உச்சத்தின் கட்டளைக்காய் காத்திருந்து,உறவுகள் கொன்றொழிவதைபல்லை நறுமியபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்ஒரு இளைஞன்.
தற்போது…..இடமாறுதல்களும், ஓட்டப் பந்தயமும் அந்நியனால்வரையப்பட்ட எல்லைக்குள்தான்.
தற்காலிக எல்லைக்குள் கட்டுண்டு இருக்கும்காற்றின் அழுத்தம் விரிவடைந்து,கனம் பெருகி, இன எல்லை வரை நீளும்.
சுதந்திரக் காற்றினைஎல்லை வரை அழைத்துச் செல்லபோராட்டச் சக்திகளுடன் மக்களும் தயாராவெனக்கவிஞன் எழுப்பும் கனதியான செய்தி காதில் விழுகின்றது.
விழி மூடும் போதும் கண்ணால் காற்றுக்குத் து}து விட்டான்.
காற்றானது,அந்த மகரந்த மணிச் செய்தியினைதேசியத்தின் ஆன்மாவிடம் சேர்த்து விட்டது.இனி என்ன….
பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதை விழும்.மண்ணில் புதுத் தளிர் துளிர் விடும்.
காற்று வரையும் காட்சிப் படிமங்கள்,அழகுணர்வைப் புள்ளியாக்கும்.அதுவரை….தொலைத்த வாழ்வினை இவன் கவிதைக்குள் தேடுங்கள்.உயிர்த்தெழும் காலம் வரும்.
விழிப்பென்பதுஇரு விழிகளையும்சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல.எதிரியைக் குறித்த கவனக் குவிப்புமட்டும் அல்ல்தன்னுள் மையமிட்டெழும்

வாணர் தாம்போதி

அம்பலவாணர் தாம்போதி புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும். புங்குடுதீவு மக்கிளன் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன. கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது. புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள். புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார். மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார். 1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார். தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார். புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம் என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர். வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது. பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது. எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி:வீரசேரி(4-05-2003)-தம்பிஜயா தேவதாஸ் ——————————————————————————– வாணர்பால வரலாறு இலங்கையில் மிக நீளமானது இப்பாலமாகும் இப்பாலத்தின் அவசியம் பற்றி மிக நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ள போதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு எவருமற்ற நிலை இந் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காணப்பட்டது. இப்பாலம் அமைக்கப்படுமாயின் தீவுப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் நன்மை பெற வாய்பிருந்தபோதிலும் புங்குடுதீவு மக்களாலேயே முன்னெடுத்து செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. புங்குடுதீவு மக்கள் இப்பாலம் அமைக்கப்படாத காலத்தில் பட்ட கஸ்டங்களை வித்துவான் சி.ஆறுமுகம் அவர்கள் கவிதையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார். தோணிகளிற் காலைவைத்து ஏறின் கொஞ்சத் தூரந்தான் மிதக்குமவை! போறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன நாணின்றி ஆடைகளைத் தூக்கி நடுக்கடலில் புதை சேற்றில் நடந்த காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும் தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவி;ட்டால்? நிறை மாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு இறiவா எம் விதியேதான் இதுவென்று ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு! மறையாதோ இக்கொடுமை என்றெண்ணி மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும் கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்ததாலே! என்ற கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஸ்டங்கள் தெளிவாகின்றது. 1890 ஆம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் பெரியவாணர் 1893ம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் சின்னவாணர் புங்குடுதீவில் பிறந்தனர். பேரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஸ்டங்கள் அனுபவரீதியாக உணர்ந்தவர். திரு. க. அம்பலவாணர் தனது பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் தொழில் தேடும் பொருட்டு மலாயா சென்றார். மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார். 1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார். 1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள். பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார். 1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள். பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார். புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர். இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர். இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும். வாணர் சகோதரர்கள் எம் கிராமத்துக்காக எவ்வளவோ கஸ்டங்களுக்கு மத்தியில் இப்பணியை நிறைவேற்றினார்கள் என்பது சொல்லத் தேவையில்லை. ஆனால் நாம் அவர் விட்டுச் சென்ற பணியை செவ்வனே செய்து முடித்துள்ளோமா என்றால் இல்லை என்பதே மகா உண்மையாகும். அன்று மலாயாவில் எண்ணிக்கையில் குறைந்தளவு வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி இப்பாலத்தை அமைத்தார். ஆனால் இன்று பல ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்தும் எம் கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? நாட்டுப் பிரச்சினையைச் சாட்டாக சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டுடிருக்கிறீர்கள். இதில் ஒரளவு உண்மை இருக்கிறதுதான். ஆனால் எமது கிராமத்தை எதிர் காலத்தில் அபிவிருத்தி செய்ய இப்பொழுதிருந்தே ஆய்வுகளை, திட்டங்களை மேற்கொள்ள முடியும். இதனை நான் எனது காலத்திலேயே செய்து முடிக்க விரும்புகிறேன். புங்குடுதீவை மட்டுமல்லாது தீவுப்பகுதி முழவதுக்குமான ஆய்வுகளை செய்து நூல்களை வெளியிட விரும்புகிறேன். இதுபற்றி ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டாலும் முழுமையாக நூலாக வெளியிடப்படவில்லை. இந்த எனது பணிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி புரிந்து எம் தீவகத்தினை வளம் கொழிக்கும் )மியாக மாற்ற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன இக்கட்டுரை கலாநிதி கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதிய தீவகம் – வளமும் வாழ்வும் என்ற நூலில் இருந்து திரு. சு. கோகிலதாசன் அவர்களால் தொகுக்கப்பட்டது

புரட்சியாளர் மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கம்
மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்
“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”
மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.இதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.
மு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.
1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.
‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.
1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.
1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.
மு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.
1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.
அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம்.
அப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.
‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.
பிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.
இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.
இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.ஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.
இங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள்.
இவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.
புpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.
“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.வாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக?’- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.
தான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.
இலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.மு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.
ஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.
இவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.
தனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.
சர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.
புங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.தனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.
புங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.
புங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.
இருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.
அவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.
அவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.
‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.
மு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.
(இக் கட்டுரை புங்குடுதீவு பழைய மாணவர் சங்க 2006ம் ஆண்டு மலரில் பிரசுரமானது)

புங்குடுதீவு-ஒரு பார்வை

புங்குடுதீவு அமைவிடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது. பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு பல்லதீவு கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது. 1981ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின்படி 14 622 மக்கள் வாழ்ந்திருந்தனர். 1991ம் ஆண்டு 17000 மக்கள் வாழ்ந்துள்ளனர் என மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன. பௌதீக வளமபௌதீக ரீதியாக புங்குடுதீவுக் கிராமத்தை நோக்கும் போது இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்வதைக் காணமுடிகின்றது. மரி காலங்களில் வீராமலைப் பகுதி மற்றும் அதன் அயற் பகுதிகளிலிருந்தும் நீர் வழிந்தோடி கள்ளியாற்றுடன் சங்கமமாவதைக் காணமுடிகின்றது. இத்தீவின் தென்பகுதி உயரம் கூடியதாகவும் வடபகுதி தாழ்ந்ததாகவும் இருப்பதுடன் கேரதீவைச் சார்ந்த பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒத்த பண்புகளைக் கொண்டதாகவுள்ளன. பொதுவாக இத்தீவின் சராசரி வெப்பநிலை 80′ பரணைற்றாகவும் வருடாந்த மழைவீழ்ச்சி 50″ க்கும் குறைவாக இருப்பதனாலும் வளம் குறைந்த நரைமண் தொகுதியே பெரும்பாலான பகுதிகளில் சிப்பி கலந்த மண்களிமண் ஊரிகலந்த மண் கொழுக்கிக்கல் கலந்த மண் என்பன காணப்படுகின்றன. இத்தீவின் நீர் வளத்தினைப் பொறுத்தவரை 68.0 சதவீதமான கிணறுகளில் உவர்த்தன்மை கொண்ட நீரே காணப்படுகின்றன என அண்மைக்காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்னீர் வளம் ஆங்காங்கே தொட்டத் தொட்டமாக காணப்படுகின்றது. வரலாற்று நோக்குபுங்குடுதீவுக் கிராமத்தில் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது. யாழ்ப்பாணக்குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது. வளவாய்ப்புகளைக் கொண்ட யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தில் தீவுப்பகுதி உட்பட புங்குடுதீவு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை தென்னிந்திய மக்களின் உள்வரவுக்கு உதவியிருக்கலாம். குறிப்பாக காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள பௌதீக மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்கள் இப்பகுதிகளில் வந்து வாழ்திருக்க நியாயம் உண்டு. அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது இத்தீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்துள்ளதைமக்கு பல்வேறு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஊதாரணமாக புங்குடுதீவு புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத்தப்படாத துறைமுகத்திற்கு அருகாமையில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்கள் அராபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பர். ஏனவே அராபியர் இத்தீவுக்கு வந்து வர்த்தகத்தில் டுபட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றி குறிப்பிட்டுள்ளது. தற்போதைய புங்குடுதீவையே முன்னர் பியாங்கு என அழைக்கப்பட்டுள்ளது. என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். பியாங்குச் செடிகள் அதிகமாக காணப்பட்டிருந்தமையால் பியாங்குதீபம் என அழைக்கப்பட்டிருந்த இத்தீவு காலப்போக்கில் பியாங்குதீவு எனவும் பின்னர் புங்குடுதீவு எனவும் மருவியதாக கொள்ள இடம் உண்டு. தமிழ்நாட்டு மக்களின் தொடர்பு காணப்பட்டிருந்தமையால் அங்குள்ள புங்கநூர் ங்குடி என்ற இடப்பெயர்வு இத்தீவுக்கு அவர்களால் சூட்டப்பட்டிருக்கலாம். இஸ்லாமியர்களது படையெடுப்புக் காலத்தில் அவர்களது கொடுமையிலிருந்து தப்பி தமது கன்னிப் பெண்களை பாதுகாக்கும்நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட )puங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது என கொள்பவர்களும் உளர். வேறுசிலர் புங்கமரம் நிறைந்து காணப்பட்டபடியால் புங்கு-உடு-தீவு என பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப் பொருள் கொள்கின்றனர். தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையால் புங்குடதீவில் சோழனோடை சோழம்புலம் பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் இத்தீவுக்கு கொங்கரடிவா எனவும் ஒல்லாந்தர் மிடில்பேக் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர். தீவுகளின் மத்தியில் அமைந்துள்ளமையால் மிடில்பேர்க் என பெயர்வைத்துள்ளனர் என்றே கொள்ள வேண்டும்.

முன்பள்ளிகள்

அறிவகம் மடத்துவெளி சனசமூக நிலையம் சிவலைபிட்டி சனசமூக நிலையம் கிராமசபை சர்வோதயம் காந்தி சனசமூகநிலையம் ஐங்கரன் சனசமூகநிலையம் நாசரேத் சனசமூகநிலையம் பாரதி சனசமூகநிலையம் தல்லையபற்று சனசமூகநிலையம் சர்வமதமுன்பள்ளி இருபிட்டி சனசமூகநிலையம் தென்னிதியதிருசபை வல்லன்சனசமூகநிலையம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஊர்காவற்துறை (தீவுப்பகுதி)   -தொகுதி                                                                                          அல்பிரட் தம்பி ஐயா ---1947 -1952                                                                            வீ.எ.கந்தையா--------------1956-1960march-1960July--   (died 1963)                               வி.நவரத்தினம்------------1963--1965                                                                                      கா.பொ.இரத்தினம--------1970--1977            
--------------------------------------------------------------------------------------
முன்னாள்   மாவட்ட சபை உறுப்பினர்
வே.க.சோமசுந்தரம்
--------------------------------------------------------------------------------------
முன்னாள் சபாநாயகர்
சேர் வைத்திலிங்கம் துரைசாமி
--------------------------------------------------------------------------------------
பா.உ.தேர்தலில் போட்டியிட்டவர்கள் (புங்குடுதீவை சேர்ந்தவர்கள் )
க:அம்பலவாணர் (பெரிய வாணர் )
வீ:வ:நல்லதம்பி
எஸ்:அமரசிங்கம்
ப:கதிரவேலு

கிராமசபை

இறுதி கிராமசபை உறுப்பினர்கள் ---------------------------------------- வட்டாரம் உறுப்பினர் ------------ -------------- ஒன்று வே- சி-அம்பிகைபாகன் இரண்டு திருமதி .சு.யோகம்மா மூன்று சு-திருநாவுக்கரசு நான்கு கார்த்திகேசு ஐந்து கு.வி.தம்பிதுரை ஆறு தர்மலிங்கம் ஏழு வே. சோமசுந்தரம் எட்டு எ .இராசரத்தினம் ஒன்பது சி.நல்லதம்பி பத்து க.வைத்தியநாதன் பதினொன்று க.மதியாபரணம் பன்னிரண்டு க. கனகசபை கிராமசபை தலைவர் - க-மதியாபரணம் முன்னாள் கிராமசபை தலைவர்கள் -------------------------------------------- வை.பசுபதிபிள்ளை,ச-அம்பலவாணர் (சின்ன வாணர் )சபாரத்தினம் ,வே.சி.அம்பிகைபாகன் , வீ.வ .நல்லதம்பி .க.செல்லத்துரை க.திருநாவுக்கரசு முன்னாள் கிராமசபை உறுப்பினர்கள் .---க .ஐயாத்துரை .சோ.க.ஐயம்பிள்ளை

அரச பொது நிறுவனங்கள்

தபாலகம் சந்தை உபதபாலகம் ஊரதீவு உபதபாலகம் வல்லன் உபதபாலகம் தட்டையன்புலம் உபதபாலகம் குறிகாட்டுவான் உபதபாலகம் இருபிட்டி பொதுநூலகம் சந்தை பொது வைத்தியசாலை ஊரதீவு வெளிநோயாளர் நிலையம் இருபிட்டி வெளிநோயாளர் நிலையம் மக்கள் வங்கி கிராமிய வங்கி பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு) குறிகட்டுவான் துறைமுகம் கழுதைப்பிட்டி துறைமுகம் பழையதுறை நுழைவாயில் (வாணர் தாம்போதி) கோரியாவடி கலங்கரை விளக்கம்

மயானங்கள்

கேரதீவு சிப்பி ஏத்தன்துறை மணற்காடு குறிகட்டுவான்

குளங்கள்

வெள்ளைக்குளம் தில்லங்குளம் அறியாரிகுளம் முருகன்கோவில்குளம் நாகதம்பிரான்குளம் ஆமைக்குளம் திகழிக்குளம் பெரியகிராய் மக்கிகுண்டு நக்கந்தைகுளம் தர்மக்குண்டு புட்டுனிகுளம் வேட்டுகுளம் கண்ணகி அம்மன்தெப்பகுளம் கண்ணகி அம்மன் குளம் சந்தையடிகுள கந்தசாமிகோவில்குளம் விசுவாமிதிரன்குளம் மாரியம்மன்கோவில்குளம்

குக்கிராமங்கள்

பழையதுறை வாண்டயாவெளி பள்ளக்காடு மேற்குதிக்கு கம்பிலியன் சங்குமாலடி நல்லாந்திட்டு திகழி போக்கத்தை திவாணிபுலம் மடத்துகாடு பொன்னான்தொட்டம் மாநாவெள்ளை தல்லமி புளியடி தனிப்பனை புட்டிவயல் கரந்தல்லி வாடை வீரம்புளியடி மானொழுவம் அரியநாயகன்புலம் கண்டல்கட்டி புட்டுனி விழாக்கண்டல் தொட்டம சங்கத்தாகேணி கோரையடி தெங்கந்திடல் முனியப்புலம் மணற்காடு சிவலைபிட்டி மாக்கொண்டல் மனியாரந்தோட்டம் தொழிலாளர்புரம் சோழகனோடை கள்ளியாறு பெரிய கண்ணாதீவு சின்ன கண்ணாதீவு நாயத்தன்காடு ஈச்சங்குண்டு பண்ணைப்புலம் முற்றவெளி தல்லையப்பற்று பெரியகிராய் நடுக்குறிச்சி புளியடித்துறை அடைக்காத்தகுளம் தூண்டி இழுப்பனை கொம்மாபிட்டி கிராஞ்சி

26 டிச., 2009

கிராமங்கள்

ஊரதீவு மடத்துவெளி வரதீவு வல்லன் மாவுதிடல் வீராமலை கிழக்கூர் குறிச்சிகாடு கண்ணகிபுரம் கோட்டைக்காடு ஆலடி சந்தையடி பெருங்காடு சங்கத்தாகேணி நடுவுதுருத்தி குறிகட்டுவான் சின்ன இறுபிட்டி இறுபிட்டி கழுதைபிட்டி கேரதீவு நுணுக்கல்

ad

ad