புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2013

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் நடந்த சாலை விபத்துகளில் 339 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியக் கூட்டரசின் சாலைத் துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
சிறிலங்கா- சீன கூட்டணியை உடைக்க புதுடெல்லியில் இன்று முக்கிய கூட்டம்
சிறிலங்காவில் முக்கியமான துறைகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியப் பாதுகாப்பு கட்டமைப்புகள் கவலை கொண்டுள்ளன. 
வடக்கில் மாகாணசபையே இல்லையாம்

வடக்கு மாகாணசபை இன்னமும் சிறிலங்கா அதிபரால் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், அதற்கான தேர்தல் ஏற்பாடுகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல், திமுக தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள


இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். 
இந்த நடவடிக்கையை கண்டித்து தே.மு.தி.க., -தி.மு.க., -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டமைப்பு ஒன்றா? இரண்டா? நாளை முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதுள்ளதைப் போல ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பாகச் செயற்படப்போகின்றதா அல்லது அதில் பிளவு ஏற்படப்போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் இரு தினங்களில் பதில் கிடைத்துவிடும்.தமிழ்த் தேசியக் கூட்


தி மு க இல் பிரிவினை மந்திரி பதவி போனதால் அழகிரிக்கு வருத்தம் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிதம்பரத்தை தனியாக சந்தித்த மர்மம் என்ன
சென்னையில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் துவங்கியது
சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (25.03.2013) காலை துவங்கியது. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

எனக்கு உடல்நிலை சரியில்லை: செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை: மதுரையில் மு.க.அழகிரி பேட்டி
 கடந்த மூன்று மாத காலமாக சென்னையில் தங்கியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று (25.03.2013)
Australia 1st innings india won by 6 wickets

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே? – சரத் பொன்சேகா புதிய தகவல்


மகிந்த, கோத்தா, 14 இராணுவ அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வர் – இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள்

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் புதுடெல்லி சிறப்பச் செய்தியாளரான, வெங்கட் நாராயண் இதுகுறித்து எழுதியுள்ளதாவது-போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நம்பகமான

சென்னையில் உள்ள தமது துணைத் தூதரகத்தை மூடுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின பாதுகாப்பு ஆலோசகரான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் றொகான் டயஸ் கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டதை அடுத்தே இது


தன்னுடன் சேர்ந்து மனைவி, பிள்ளைகளை ஆபாச படத்தை பார்வையிட கூறிய தந்தை கைது

ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் காலி மாவட்டத்தில் ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டுகளை திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இந்தியா நோக்கி பயணிக்க இருந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர்.

ad

ad