புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக்குழுவை நியமிக்க அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் இணக்கம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5.15 மணியிலிருந்து இரவு 7.30 வரை நடைபெற்றது.

,

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக ஒரு உயிர் பறிபோய் இருப்பது மக்களை வேதனை அடைய வைத்துள்ளது.
ilavarasan2

,


தருமபுரி திவ்யாவின் காதல் கணவர்
இளவரசன் தற்-கொலை

 தருமபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன். தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தண்டவாளத்தின் அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த கைப்பையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதம் இருந்தாகவும் கூறப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும், அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். 
இதைத்தொடர்ந்து திவ்யா ஆஜரானார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று திவ்யா, கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தாயுடன் செல்வதாக கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டனர். அப்போது அவரது சட்ட‌பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

,

வசூலித்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள்! - மூத்த ஈழப் போராளியின் வாக்குமூலம்-
விகடன் 
ஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார்.

,

திருமணமாகி இரண்டு மாதங்களில் குழந்தையை பிரசவித்த பெண்: அதிர்ச்சியில் கணவன்
 திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

,

விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பிடிவாரண்ட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

,


சுவிடனிலிருந்து ஸ்கைப்பில் காதலித்து! பாலியல் செய்தவர் மாட்டிய அதிரடி

ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும்

,

வடசென்னை தொகுதியில் அ தி மு க வுக்கே வெற்றி வாய்ப்பு -நக்கீரன் சர்வே 
              தேர்தல் கருத்தாய்வு என போகும்போதெல்லாம், மக்கள் விதம்விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். சாதாரணவர்கள், பாமரர்கள், வெளியுலகம் அறியாதவர்கள் என பொதுவாகக் கருதப்படும் மக்கள், ஆட்சியைப் பற்றியும் ஆட்சி யாளர்களைப் பற்றியும் பட்டென கருத்துகளை எடுத்துவைத்தார்கள். பல்வேறு தரப்பட்ட மக்களும் கூறிய கருத்துகளில் இருந்து கிடைத்துள்ள முடிவுகள், சிலருக்கு ஆச்சர்யமாகவும் சிலருக்கு அதிர்ச்சி யளிப்பதாகவும் இருக்கலாம். எல்லா தேர்தல்களிலும், மக்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டிவரும் நக்கீரன், இந்த முறையும் தன் சீரிய பணியில் இறங்கியுள்ளது. வழக்கம்போல, வாசக எஜமானர் களாகிய நீங்களும் வரவேற்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 

2014 மக்களவைத் தேர்தல் கருத்தாய்வை, வடசென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து தொடங்கியிருக்கிறோம். 

தொகுதிக்குள் போவதற்கு முன், தொகுதியைப் பற்றி கொஞ்சம்...!


வடசென்னை என அழைக்கப்பட்டாலும், பூர்வீக சென்னையே இந்தப் பகுதிதான். துறைமுகம், அனல்மின் நிலையங்கள், அசோக் லேலண்டு, எம்.எஃப்.எல்., எம்.ஆர்.எஃப்., சி.பி.சி.எல்., விம்கோ என பெரும் பெரும் தொழிற்சாலைகள்  வரவர, தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியாக மாறிப் போனது. 

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வாசகம், வடசென்னைக்கு சிறிதும் பொருந்தாது. வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மணலிப்புதுநகர், சின்னசேக்காடு பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகபட்சமாக 10 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், தென்சென்னை, மத்திய சென்னையிலோ நிலமதிப்பு 50 மடங்கு அதிகரித்துள்ளது. வடசென்னையின் வளர்ச்சிக்கு பளிச்சிடும் உதாரணம் இது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தி.மு.க. மட்டும் இங்கு 10 முறை வெற்றி பெற்றுள்ளது. குமரி மாவட்டத்துக்காரரான நாஞ்சில் மனோகரன், தி.மு.க. சார்பில் 67, 71 தேர்தல்களில் வெற்றிபெற்றார். பிறகு, அதே மனோகரன், அ.தி.மு.க. சார்பில் இங்கு நின்றபோது, தி.மு.க.வின் ஆசைத்தம்பி அவரைத் தோற்கடித்தார். இதேபோல, 1980-ல் தி.மு.க. எம்,பி.ஆன ஜி.லட்சு மணன், காங்கிரசுக்குத் தாவி, மீண்டும் போட்டியிட்ட போது, திமுகவின் என்.வி.என். சோமுவிடம் தோற்றுப்போனார். 1989-ல் சோமுவைத் தோற்கடித்து எம்.பி.யான தா. பாண்டியன், ராஜீவ் கொல்லப்பட்ட 91-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்றார். அடுத்து நடந்தது சுவாரஸ்யம், மூன்றாவது முறையாக ’கை’ சின்னத்தில் போட்டியிட்ட தா.பா., என்.வி.என். சோமுவிடம் தோற்றுப்போனார். கடந்த தேர்தலில், தத்துவமேதை எனப்படும் டி.கே. சீனிவாசனின் மகன், டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க. சார்பில் நிற்க, அவரிடமும்  தோற்றுப் போனார் தா.பா. 98, 99, 2004, 2009 எனத் தொடர்கிறது, தி.மு.க.வின் வெற்றி.


ஹாட்ரிக் வெற்றி வெற்ற தி.மு.க.வின் செ.குப்புசாமியிடம், 2004 தேர்தலில் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார் (பா.ஜ.க.) தோற்றுப்போனார்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து பி.சீனிவாசன் என்பவர் மட்டுமே வடசென்னை யில் வெற்றி பெற்றுள்ளார். சோஷலிஸ்ட் கட்சியில் நின்று இத்தொகுதியின் முதல் எம்.பி.ஆன எஸ்.சி.சி. அந்தோணிபிள்ளை, 1967-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தது, வரலாறு. 

இப்போது வடசென்னை மக்களவைத் தொகுதியில் என்ன நிலவரம்? 

ஆர்வத்தோடு களமிறங்கிய நம்மைச் சூழ்ந்துகொண்ட மக்கள் -குறிப்பாக பெண்கள், ’""ரேஷன் ஃபாரம் ஃபில் பண்ண வந்திருக்காங்கப்பா, முதியோர், விதவை பென்ஷனுக்கு புதுசா ரசீது குடுக்க வந்திருக்காங் களாம்''’என்று பலவித எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

போகுமிடங்களில் எல்லாம், நல்ல குடிநீர் கிடைப்பதில்லை, சுவாச நோய்களை உண்டாக்கும் காற்றுமாசுபாடு, மோசமான சாலைகளால் அன்றாடம் நிகழும் மரண விபத்துகள், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை முக்கிய பிரச்சினைகளாக மக்கள் சொல்கிறார்கள்.  

சென்னையில் மின்சாரப் பிரச்சினை இல்லைனு சொன்னாலும், வடசென்னையில இரவு, பகல் கணக்கில்லாமல் அடிக்கடி மின்தடை. முறை யான பராமரிப்பு இல்லாததால், மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட்டு, அப்பாவி ஏழை மக்கள் பலியாகுறது சர்வசாதாரணம். வடசென்னை முழுக்க நிலத்தடி நீர் படுமோசம். பல இடங்கள்ல குடிநீர்ல சாக்கடை கலந்துதான் வருது. இதனால, தனியார் விக்கிற 2ரூபாய், 6 ரூபாய் தண்ணீ, 35 ரூபாய் கேன் தண்ணீ வாங்கிதான் சமைக்கவேண்டியிருக்கு. இலவச லாரித் தண்ணிக்கு எல்லா இடத்திலயும் குடத்துக்கு 50 காசு கொடுக்கணும்கிறது கட்டாயம். வடசென்னையில எங்கயாவது ஒரு நல்ல சாலையப் பாத்துடமுடியாது. பல இடங்கள்ல கழிவுநீர் ஓடிக்கிட்டே இருக்கும். ""திருவொற்றியூர் நெடுஞ்சாலை அகலப்படுத்துறது, சென்னை- எண்ணூர் துறைமுக இணைப்புச்சாலை பணிகளை முடுக்கிவிடாததால், தினமும் விபத்துகள் நடக்குது. திருவொற்றியூர் மாட்டுமந்தை ரயில்வே மேம்பாலம் உறுதிமொழியா மட்டுமே இருக்கு. அஞ்சு முறை டெண்டர் விட்டும் இந்தப் பணி தொடங்குறதுக்கான அறிகுறியே தெரியல. இதனால், மணலி பகுதியிலுள்ள தொழிற்சாலைகள்ல விபத்து ஏற்பட்டு உயிராபத்து ஏற்படுறவங்கள, ஸ்டான்லி மருத்துவமனைக்கோ, தண்டையார்பேட்டையில இருக்கிற அப்பல்லோ மருத்துவமனைக்கோ ஆம்புலன்சுல வந்தாலும், பல நேரங்கள்ல உயிரைக் காப்பாத்த முடியாமப் போவது பெரும் கொடுமை. 


இங்க இருக்கிற பெரும் தொழிற்சாலைகளால் காற்று மாசுபாடு உண்டாகுது. குறிப்பா, மழை, குளிர் காலங்கள்ல காத்துலயே துகள்களாகவே மாசுகள் மிதக்கும். இதனால, ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நாள்ல கடுமையா அவதிப்பட்டு மருத்துவமனைகளில் குவியறதை ஒவ்வொரு வருசமும் பாக்கமுடியும். மணலி பகுதியில மாசுபாட்டை ஆய்வுசெய்றதுக்கு ஒரு கருவியைப் பொருத்துனாங்க. அதனால ஏதாவது பலன் இருக்கானு தெரியலை. கொடுங்கையூர் குப்பைக் கூடத்தால் அதைச் சுத்தியுள்ள பெரம்பூர், திரு.வி.க. நகர் பகுதிகள்ல மனிதர்கள் வாழவே முடியாத அளவுக்கு காத்துல இருபது மடங்கு அதிகமா மாசுபாடு ஏற்பட்டுருக்குனு ஆய்வுகள் மூலமா நிரூபிச்சும் ஒரு நடவடிக்கையும் இல்லை. குப்பையில இருந்து மின்சாரம் தயாரிக்கப்போறதா வாக்குறுதி மட்டும் பல பேரு கொடுத்தாங்க. செயல்பாட்டுல ஒன்றையும் காணோம்''’என்று ஒவ்வொரு பகுதியிலும், உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய ஆனால் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைப் பட்டியலிடு கிறார்கள், வடசென்னை மக்கள். 

"தி.மு.க.வைச் சேர்ந்த தொகுதி எம்.பி.  டி.கே.எஸ். இளங்கோவன் பற்றி தனிப்பட்ட வகையில் பொதுவாக எந்தப் புகாரும்  இல்லை. ஆனால், "தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை' என்று பரவலாக சொல்லப்படும் புகாராக இருக்கிறது. எம்.பி. தொகுதி நிதியில் செய்யப்பட்ட பணி என்று இவரைக் குறிப்பிடும் பலகைகளை அரி தாகவே பார்க்க முடிந்தது. ""மேம்பாலம் போடறேன்னு சொல்லி, இவர் கொடுத்த லிஸ்ட்ல பல இடங்கள்ல மேம்பாலம் வரவே இல்லை. திருவொற்றியூர் சாலை விரிவாக்கம், கொடுங்கையூர் குப்பை போன்ற பிரச் சினைகளில் இவர் என்னதான் செய்தார்னே தெரியலை. திருவொற்றியூர்-விம்கோநகர் இடையில் ஒரு ரயில்நிலையம் அமைப்பது, திருவொற்றியூரில் மும்பை, கல்கத்தா ரயில்கள் நின்றுசெல்ல வைப்பது, கடலரிப்பால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தூண்டில்வளைவு அமைப்பதுன்னு பல உறுதிமொழிகளை மட்டும் கொடுத்தாரு...'' என குறைகளைப் பட்டியலிடுகிறார்கள், தொகுதி வாசிகள். 

""நல்லது கெட்டது எதுவானாலும் வந்து நிப்பாங்க’’ என்று பழைய எம்.பி.க்களில் என்.வி.என்.சோமு, செ.குப்புசாமி இருவரையும் நினைவுகூர்கிறார்கள். 


இது ஒரு பக்கம் இருக்க, நடப்பு அரசியல் பற்றி மக்களின் மனக் கணக்குகள், சுவாரஸ்யமாக இருக்கின்றன.  

உடும்புப்பிடியாக, "நாங்க எப்பவுமே இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம்'’என்று சொல்பவர்கள், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களைப் பிடிக்கவில்லை என நேர்மாறாகவும் கருத்துக் கூறினார்கள். 

வடசென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி தராதது பற்றி பரவலாகவும் ஜெயக்குமாரின் பதவியைப் பறித்தது ராயபுரத்திலும் கடும் அதிருப்தி நிலவுகிறது. 


வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் பா.ம.க.வுக்கு மட்டுமின்றி தி.மு.க., அ.தி.மு.க. என பல கட்சிகளுக்கும் ஆதரவு பிரிந்து  இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதேபோல, தலித் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., வி.சி.க., மார்க்சிஸ்ட் கட்சி என்ற வரிசையில் ஆதரவு காணப்படுகிறது. முஸ்லிம்களில் பாதிக்கும் மேல் தி.மு.க.வுக்கும் கணிசமானவர்கள் ம.ம.க.வுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். வடசென்னையில் நீண்டகாலமாக இருந்துவரும் மலையாளிகள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பலத்த ஆதரவு காணப் படுகிறது. 

மத்தியில் காங்கிரசா, பா.ஜ.க.வா என்றால் காங்கிரசுக்குதான் வரவேற்பு. காங்கிரஸ் மேல இருந்தாதான் நல்லது என்று சொன்ன பலருக்கும், அதற்கான காரணம் கேட்டால், சொல்லத் தெரியவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினைக்குக் காரணம் என காங்கிரஸ் மீது குற்றம்சாட்டப்படுவதை நிராகரித்துவிட்டு, ’’பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை செலக்ஷன் பண்ணலாம்னு இருக்கோம்’’ என்றும் சில இடங்களில் குறிப்பிட்டுச் சொன்னார்கள். பா.ஜ.க.வில் மோடியையும், அத்வானியையும் சம அளவில் பிரதமர் வேட்பாளருக்கு டிக் அடிக்கிறார்கள். அதே நபர்கள், தமிழ்நாட்டில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வை டிக் செய்து திணறடித்தனர். 


அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு பற்றிக் குறிப்பிட்டு, எல்லா இடங்களிலும் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். குடிநீர், சாலை பிரச்சினைகளைத் தீர்ப்பதில், கடுமையான மந்தநிலை. எந்த கவுன்சிலரைப் பற்றியும் நல்ல கருத்தே வெளிப்படவில்லை, குறைகளும் புகார்களுமே வருகின்றன. ஆனாலும், கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சி பரவாயில்லை என கணிசமானவர்கள் மதிப்பிடுகிறார்கள். 

எம்.பி.யைப் பொறுத்தவரை, குற்றச்சாட்டு என எதுவும் இல்லை என்றாலும், ’நல்லவருதான், ஆனா வல்லவரு இல்லையே’ என்கிற பெயரே கிடைத்திருக்கிறது. 

தன்னுடைய பணிகளைப் பற்றி இளங்கோவன் என்ன சொல்கிறார்?

""நான் உறுதியளித்தபடி, வியாசர்பாடி, மூலக்கடை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம் பாலப் பணிகள் தொடங்கி, நடந்துவருகின்றன. ரெட்டை ஏரி மேம்பாலம் அமைக்க, 2011-ல் தி.மு.க. ஆட்சியில் அறிவித்தது, இப்போதுதான் பணியைத் தொடங்குகிறார்கள். சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தை, தொடர்ந்து கவனித்து நான் முயற்சி எடுத்ததால்தான் பூர்வாங்கப் பணி தொடங்கியிருக்கிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலை அகலப்படுத்துவது வழக்குகளாலும் இடப் பிரச்சினையாலும் முடியாமல் இருக்கிறது. 

என் தொகுதி நிதியில் இருந்து, நெட்டுக்குப்பம் சுனாமி குடியிருப்புக்கு ரூ.4.5 கோடி, 10 இடங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க தலா ரூ.8 லட்சம், அம்பேத்கர் கல்லூரியில் கலையரங்கத்துக்கு ரூ.50 லட்சம் மற்றபடி சேதமடைந்த பள்ளிகள், நூலகக் கட்டிடம் என பல்வேறு திட்டங்களுக்கு 80% தொகையை ஒதுக்கி, பணிகளும் நடந்துள்ளன. புதிய மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்காமல் இருப்ப தாலும் நெரிசலான வடசென்னையில் பல இடங்களில் திட்டத்துக்கான இடம் கிடைக்காமல் இருப்பதாலும் மீதமுள்ள தொகையை ஒதுக்க முடியவில்லை. திருவொற்றியூரில் வடமாநில ரயில்கள் நின்று செல்லும்படி அங்கு இடத்தை அகலப்படுத்த வேண்டி யிருக்கிறது. இதற்கு, டெல்லியில் அண்மையில்தான் ஒப்புதலே தந்தனர்''’ என்று விளக்கம் அளிக்கிறார், டி.கே.எஸ். இளங்கோவன். 

வடசென்னை தொகுதியில் நாம் சந்தித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6030.

ஆண்கள் 3012, பெண்கள் 3018.

இவர்களில் இதற்கு முன்...

வாக்களித்தவர்கள் 90%

இதுவரை வாக்களிக்காதவர்கள் 10%

வரும் நாடாளுமன்றத் தேர்தலில்

வாக்களிப்போம் என்றவர்கள் 93%

வாக்களிக்கப் போவதில்லை என்றவர்கள் 7%

-நக்கீரன் சர்வே டீம்

,

பொலிவியா அதிபர் விமானத்தில் தப்பித்தாரா ஸ்னோடென். அவசரமாக தரையிறக்கி சோதனை.

அமெரிக்காவின் உளவு செயல்பாடுகள் குறித்து தகவல் வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்ய நாட்டின் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியுள்ளார். இவர் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு கோரிக்கை அனுப்பி இருந்தார். இதில் பொலிவியா நாடும் ஒன்று. 
 
இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின் பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மொராலெஸ் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டார். இந்த

,

புல்லுருவிகளுக்கும் துரோகிகளுக்கும் இடமளிக்கும் கூடாரமாக தி.மு.க. மாறிவிட்டது. பரிதி இளம்வழுதி


கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார் பரிதி இளம்வழுதி! தி.மு.க. சார்பில் ஆறு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை சபாநாயகராகவும் செய்தித் துறை அமைச்சராகவும் பொறுப்புவகித்து, தி.மு.க-வின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பரிதி இளம்வழுதி. 1991-96 காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் சட்டசபைக்குச் சென்ற ஒரே உறுப்பினர், பரிதிதான். அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களால் தினந்தோறும் தாக்கப்பட்டு, சபையில் இருந்து தூக்கி வீசப்படுவார் பரிதி. இன்று, தன்னுடைய மனவலிக்கு மருந்து தேடி, அதே அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 

,


ஸ்காபுறோ RT சேவை சுரங்க தொடரூந்தாக மாற்றுவதில் நீடிக்கும் சிக்கல் !!
J
 ஸ்காபுறோவிற்கு சுரங்க தொடரூந்துகளே தேவை என்ற கவுன்சிலர்களின் வாதத்திற்குப் பின்னர் புதிதாக சுரங்கத் தொடரூந்து  சேவைகளை கொண்டு வர வேண்டுமானால் மேலும் அதிகமாக  $1 பில்லியன் செலவாகும் என்ற குண்டைப் போட்டுள்ளது மெட்ரோலிங்ஸ்.

மெட்ரோலிங்சின் புதிய அறிவிப்பினால் சுரங்கத தொடரூந்து சேவைகளுக்காக மாநகர அரசிடம் தொடர்ந்தும் வாதம் செய்து வந்த மைக்கேல் தோம்ப்சன் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

,


 ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு - கென் கிருபாவா , மிட்சீ ஹன்டரா !ளியிடப்பட்டிருப்பினும் கூட ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடும் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவக் கூடும் எனத் தெரிகிறது. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடப் போகும் கென் கிருபா இகுருவி வாசகர்களுக்கு புதியவரல்ல. நம்மவர் என்பதால் அவரைப் பற்றி அதிகம் சொல்லித்தான்  தெரிய வேண்டும்  என்பதில்லை. அந்த பகுதியில் பிரபலமான ரியல் எஸ்டேட் முகவர் மட்டுமல்லாது கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். 

.

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது  செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.
மரியா பால் கைது
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம்.

.

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது  செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.
மரியா பால் கைது
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம்.

,

ஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா 

லகின் ஒற்றைத் துருவ வல்லரசின் தொடைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எட்வர்ட் ஸ்னோடன் என்ற தனி ஒரு மனிதரை எதிர்த்து உலக நாடுகளின் அரசுகளுக்கெல்லாம் மிரட்டல் அனுப்பி கொண்டிருக்கிறது அமெரிக்க ‘வல்லரசு’.
பொலிவிய அதிபர் விமானம்
திசை திருப்பப்பட்ட பொலிவிய அதிபர் விமானம்
மனித உரிமை, பேச்சுரிமை, தகவல் உரிமை என்று முழக்கங்களை வைத்து நூறு ஆண்டுகளுக்கு மேல் புனித பிரச்சாரம் செய்து வந்த அமெரிக்க போதனையின் லட்சணம் உலகெங்கும் நாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களுக்கு எதிராக எந்த வித குற்றச் செயலும் செய்யாத ஸ்னோடனை தேடிப் பிடிக்கும் நோக்கத்தில் அடிப்படை மனித நாகரீங்கள் அனைத்தையும் மீறி

,

கே.பி, தமிழினி மற்றும் தயா மாஸ்டர் மூவரும் ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் நியமனங்களுக்கென விண்ணப்பம்

எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனங்களுக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதி சேகரிப்பாளரும், ஆயுதக் கொள்வனவாளருமான ‘கே.பி’ என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணித் தலைவி ‘தமிழினி’ என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் அதே அமைப்பின் முன்னாள் பேச்சாளரும், பிரச்சார அணித் தலைவருமான ‘தயா மாஸ்டர்’ என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மூவரும் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

,

முழு நாடும் சிங்கள பௌத்த நாடு என்ற ஏகாதிபத்திய கொள்கையை ஏற்று கொள்ள முடியாது - ஹெல உறுமயவுக்கு மனோ

இந்த நாடு இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. இந்த அடிப்படையை

,

அதிமுகவில் இணைந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300

,


இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை : திவ்யா
தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதலர்கள் இளவரசன் - திவ்யா பிரிந்தனர். திவ்யா தனது தாயாருடன் தான் செல்ல விரும்புவதாக சென்னை

,

காடுவெட்டி குரு மீது மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டம்
 காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்.

பாமக எம்.எல்.ஏ.  காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நேற்று ரத்து செய்யப்பட்டது.

.

விடுதலைப்போராட்டம் முடிந்து விட்டது என்று கேணல் ராம் கூறியதாக இணையங்களில் செய்தி கிடக்கிறது. இதே ராம்தான் மே 18 இற்கு பிறகு காடுகளுக்குள் இருந்து பயிற்சி எடுக்கிறோம், விரைவில் போராடுவோம் என்றும் கூறினார். 
அவர் அற்புதமான ஒரு போராளி. கேபியின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இன்று சிங்கள சித்திரவதை முகாமிலிருந்து சிங்களத்தின் தேவைக்கேற்ப பேச வேண்டிய சூழல்..

,

விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுர
ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை

,

தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைக்கப்படுகிறார்! - கே.பி. வடக்கில் போட்டி: அமைச்சர் மைத்திரிபால
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார். 

,

நாளை கொழும்பில்
அவசரமாக கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. 
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் நாளை பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

புலிக்கொடியுடன் பிரித்தானியா கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு சர்வதேச பிடியாண
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பிரித்தானியா கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இலங்கைத்

,

13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதிகாரத்தை பகிர்ந்து ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளினால் கையொப்பமிடப்பட்ட மகஜரில் ரணில் கையொப்பமிட்டார்.
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்களிடம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளது.

.

அமைச்சர் திஸ்ஸ விதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது: புளொட் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சிறிதரன்
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் அமைச்சர் திஸ்ஸ விதாரண இல்லாத தெரிவுக்குழுவில் தமிழ்

.

ஏனைய மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரமே வடக்கிற்கும் வழங்க வேண்டும்: விமல்- மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர்களின் புதல்வர்கள் போட்டி
நாட்டில் ஏனைய மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் மாத்திரமே வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ad

ad