வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. |
-
25 ஏப்., 2024
வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை
சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு? [
பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார் |
ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. |
புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். |
மன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார் |
இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். |