ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் |
-
22 ஜூலை, 2022
முப்படையினருக்கும் அதிகாரம்!- வர்த்தமானியை வெளியிட்டார் ரணில்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - மன்னிப்புச் சபை கண்டனம்!
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு இது ஏற்றுக்கொள்ள முடியாதது அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளது |
கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது |
பொறுத்திருந்து பார்ப்போம்!
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
காலிமுகத்திடலில் தாக்கப்பட்ட பிபிசி ஊடகவியலாளர்கள்!- நடந்தது என்ன?
“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார். |
காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்! Top News
கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |