மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம்
மாநிலங்களவை மாற்றுத் துணைத்தலைவராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று குடியர சுத் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். மாற்றுத்துணைத் தலைவர் பதவி வகிக்கும் முதல் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டனர்.ஈராக்கிலிருந்து நாளை கேரளா வருகின்றனர்
ஈராக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய நர்சுகள் அனைவரும் நாளை காலை கேரளா வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கத் தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிடுமாறு வெளியுறவு அமைச்சுக்கு பணிப்பு - இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமெரிக்க
அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசனை அழைத்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு அமைச்சரவை வெளியுறவு அமைச்சுக்கு பணித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் (சிட்டிசன்சிப் புரோகிராம்) பிரஜாவுரிமை நிகழ்ச்சி திட்டம் ஒன்றுக்காக இலங்கையில் இயங்கும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரியிருந்தது.
புலிகளின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் எனக் கருதப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும்: கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
அளுத்கம வன்முறை சம்பவம் - மருத்துவ அதிகாரியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ அதிகாரியை, நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு களுத்துறை நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.