புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2020

புங்குடுதீவு உறவுகளே .சற்றே செவிமடுங்கள் இந்த பதிவை .
----------------------------------------------------------------------------------------------
தாயகத்தில் தீவகம் மற்றும்  எமது தாயநிலம் புங்குடுதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளினதும் சமூக ஆர்வலர்களினதும் ஒட்டுமொத்த வேண்டுகோள் ஒலிப்பதிவினை அதன் சாராம்சத்தை தொகுத்து வழங்குகிறோம் . எல்லா சமூக வலைத்தளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை .யாரும் பார்க்கலாம்  யாரும்  விமர்சனம் செய்யலாம் .எமது  ஊரின் ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து வித்யாவின் கொலைக்கு பின்னர் போன்றே ஊரின்  புகழுக்கு களங்கம் விளைவிக்க  சில புலம்பெயர் தேசத்து  எங்களூரை சேர்ந்த கனவான்களே கோடரிக்காம்புகளாக வழி  சமைத்து வேடிக்கை பார்க்கின்றனர் . புங்குடுதீவு மக்கள் புலம்பெயர் காலத்துக்கு முன்பிருந்தே கல்வி வர்த்தகம் ஆன்மிகம் என்று எமது ஊரில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் புகழோடு வாழ்ந்து காட்டியவர்கள்.  இதனால் மற்ற ஊறவர்களுக்கு எமது  தாயநிலைத்தை பற்றி இயல்பாகவே பொறாமையும்  கிண்டலும் கொள்வது உண்டு .புலத்து தேசங்களிலும் இது தொடர்கிறது .இன்றைய நவீன கலாசார பிறழ்வு  கொண்ட யுகத்தில் இது போன்ற சம்பவங்கள் எல்லா ஊர்களிலும்  இடம்பெறுவது வழமை . ஆனால் எங்கள்   மண்ணில்  நடக்கும்போது இன்னொருமுறை இது போன்று நடவாதிருக்க  எம்மால் உச்சக்கடட எதிர் வினையாற்றலில் ஈடுபடுகிறோம் ஏனெனில்  எமக்கு  அதற்கான ஆளணி பொருளாதார உலக ரீதியான வலைப்பின்னல் தொடர்பாடல் சக்திகள் நிறையவே இருப்பது தான். மற்ற ஊரவர்கள் இதுவும் கடந்து போகும் என்று போய்க்கொண்டே இருப்பார்கள் .
ரூபன் சர்மாவின் சம்பவத்தையடுத்து காவல் துறை தன்  கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறது .விசாரணை செய்கிறது .சந்தேகநபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் சட் டப்படி இந்த உறுதியான செய்திகளை மட்டும் வேண்டுமானால் எழுதுவதே பதிவிடுவதோ   தான் தர்மம் .இதனை  விடுத்து புலம் பெயர் தேசத்தில் வாழும் எமது ஊரை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் எண்ணப்படி முகநூல் விளம்பரத்துக்காகவோ இணைய பரம்பலுக்காகவோ  பழைய புராணங்கள் கற்பனை கதைகளை இங்கே  சேர்த்து தமக்கு வேண்டப்படாதவர்களையோ அல்லது அமைப்புகளையோ  இழுத்து  வைத்து எழுதி குளிர் காய்கிறார்கள் உண்மையில் தாய் மண்ணை   உயிராக  நேசிக்கும்  ஒவ்வொரு  புங்குடுதீவு  மனிதனும்  ஊரை தனது சொந்த தாயாகவே மதிக்கிறான்   ஊரில் குற்றங்கள் உருவாக அங்கே   உள்ள  மதுபானசாலை பெரிய காரணமாகும் .தீவகத்திலேயே  இங்கே தான் இந்த மதுபானசாலையை  எண்பதுகளில் திறந்துள்ளார்கள் . கூர்ந்து கவனியுங்கள் முக்கியமாக  இப்படி பிறந்த ஊரையே கேவலமான பழிக்கும் பதிவிடுவோர்  வாழ்வில் வசதியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக  ஒரு சதமும் ஈயாத பிறவிகள் . ஊருக்கான எந்த  செயல்பாட்டிலும் ஈடுபாடு காடடாதவர்களே இவர்கள் முடிந்தால் அதனை பதிவி டச்சொல்லுங்கள் மற்றவர்கள் அமைப்புக்கள் செய்வதை கண்டு  மனம் புழுங்கி தான்  இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் பிரான்சில் இருந்து  ஒரு ஊரின் உறவுக்கு இதுவே  தொழில் .இவரின் எழுத்துக்களை  கவனித்தால் வேற்று  ஊரவன்  இவர் எதோ ஊருக்கு வெட்டிக்கிழிக்கிறார் போல அது தான் இப்படி விமர்சனம்  செய்கிறார் என்று  ஊகிப்பார்கள் .இவர் தனது பதிவுகளை சமூக வலை தளங்களில் இடு வதோடு அவற்றை இலங்கையின் மக்களுக்கு  பொதுவான கட்சி,  சமூக சேவை அமைப்புக்கள், ஊர் அமைப்புக்கள்  என்றெல்ல்லாம் தேடி தேடி அந்த  தளங்களிலும் குழு நிலை   தளங்களிலும் பதிவிட்டு  கேவலப்படுத்துகிறார் இவரின் பதிவை கண்டு அவர்களும்  நக்கலும்  கிண்டலும்   மிக்க  விமர்சனங்களை(comments ) பதிவேற்றுகிறார்கள் ஏன் எங்கள் ஊரை சேர்ந்தவர்களே மீள்பதிவிடுகிறார்கள் . அங்கே   இருக்கும் உள்விஷயங்கள்  அதனால்  ஏற்படும் பாதிப்புகளை   விளங்கிக்கொள்ளாமல் மேலெழுந்த வாரியாக பார்த்து செய்வது வேதனை அளிக்கிறது .எங்கள்  ஊரை பெண்களை வரட்சியை கேவலப்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கவா போகிறீர்கள் .எங்கள் சகோதரிகளின் பண்புகளுக்கு களங்கம்  விளைவிக்க துணை போகாதீர்கள் புலம்பெயர்  புங்குடுதீவு மக்களும்  ஊரின் மக்களும்  பரஸ்பரம் ஆதரவுக்கரங்களுடனும் நண்றிகரங்களுடனும்  பின்னி பிணைந்து வாழ்கிறார்கள் அண்மைய கொரோனா காலத்து நிவாரண பங்களிப்பே  நல்ல சாட்சி இலங்கையில் எந்த ஊர் மக்களுக்கும் கிடைக்காதளவு தாராளமய பொருட்களும் பணமும் கூட கிடைத்தது மறக்க முடியாதது .அன்பு உறவுகளே  நாங்கள் எங்கள் ஊரின் நல்லது கெட்டதுகளை நாங்களே உள்வாங்குவோம்  நாங்களே ஆலோசிப்போம் நாங்களே தீர்த்துக்கொள்வோம் .அந்நியனுக்கு இங்கே வேலை இல்லை .புங்குடுதீவு பல வரலாற்றுப் பெருமை கொண்ட ஊர் .இப்போதும் நாங்கள் அவ்வாறே பேணிப்பாதுகாப்போம் புலத்தாரும் ஊராரும் என்றும் போலவே கை  கோர்த்து உறாவிடி மகிழ்வோம் இது போன்ற ஈனப்பிறவிகளை இனம் கண்டு பகிஸ்கரியுங்கள் நன்றி எங்கள் ஊரவன் மட்டும் கண்ணியமாக நாகரீகமாக விமர்சனம் எழுதுங்கள் 

ad

ad