ஐக்கிய நாடுகள் சபையின் 25 ஆவது மனித உரிமை மாநாட்டில் ஈழத் தமிழருக்கான நீதி கோரி தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் 14.02.2014 அன்று ரொறன்ரோவில் இடம்பெற்றது.
மாலை 3:00 மணியளவில் British Consulate, Toronto, Bay & College St, Toronto, ON எனும் இடத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏராளமான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.