புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2013

முல்லைத்தீவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், நேற்று மாலை 6.05 மணியளவில் ஈகைச்சுடரேற்றி மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் தங்கள் உறவுகளை இழந்த பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.

து.ரவிகரன்,
வடமாகாணசபை உறுப்பினர்
முல்லைத்தீவு மாவட்டம்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது நேற்று (27.11.13) அதிகாலை 1.30 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதந்தாங்கிய 12க்கும் மேற்பட்ட நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இலங்கை அரசும் அதன் படைகளும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுமானால் அது பாரிய பின் விழைவுகளை தோற்றுவிக்கும்.

பிரச்சாரப் பிரிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
28/11/2013
மதுரை ஆதீனம் மீது 750 கோடி மோசடி புகார்
பல ரூபாய் மோசடி செய்ததாக மதுரை ஆதீனத்தின் மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.   இன்று காலை 11 மணி அளவில் மதுரை போலீஸ் கமிசனர் சஞ்சய் மாத்தூரை
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை ஆனது எப்படி?
சங்கரராமன் கொலை வழக்கில், அவரது குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதற்கு காரணம் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் கூறியுள்ளார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை : சங்கரராமன் மகன் ஆனந்த் அதிர்ச்சி

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்
பிரான்ஸ் மக்கள் கடலலையென திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்
போரில் இரு தரப்பினராவும் சாவடைந்த மக்களுக்காகவும் மாவீரர்கனளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் நாள் ஆரம்பமாகியது.
லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் [ பி.பி.சி ]
லண்டனில் இலங்கைப் போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதற்கான ''மாவீரர் தின நிகழ்வுகள்'' எக்ஸ்சல் மண்டபத்தில் நடந்தது.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்! பிரேத பரிசோதனையில் அம்பலம்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்திய போது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரதே பரிசோதனை சட்டவைத்திய அதிகாரியான சின்னையா சிவரூபன் முன்னிலையில் நடத்தப்பட்டது.
சுவிட்சலாந்து நாட்டின் எழுச்சியுடன் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம்
சுவிட்சலாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் களைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.

ad

ad