புங்டுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் கா.பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்)அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக நடந்தேறியது .முன்னாள் புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் ந.தர்மபாலன்அவர்களின் நூல் அறிமுக உரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் வாழ்த்துரை யை பேராசிரியர் வி.சிவசாமிஅவர்களும் ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன் அவர்களும் நிகழ்த்த முதல் பிரதி யை திரு சிவா நற்குண சங்கர்அவர்கள் பெற்றுக் கொண்டார் .பல முன்னாள் அரச உத்தியோகத்தர்களும் அதிபர்கள் ஆசிரியர்களும் உரையாற்றி சிறப்பித்தார்கள்
நன்றியுரையை தர்மகுனசிங்கம் (முன்னாள் அதிபர் புங் ம வி) நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது .விழாவினை கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் நூலின் ஆசிரியற்குழுவை சேர்ந்த ந.தர்மபாலன் அவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தாயகம் வந்து வெகு சிறப்பாக நிறைவேற்றி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது