புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2022

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல இனி என்ன வாய்ப்பு?

www.pungudutivuswiss.comஇலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையுடனான சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 2 ரன்களை அடிக்கவிடாமல் இலங்கையை தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது இந்திய அணி. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை இலங்கை கேப்டன் தசுன் ஷனகா எதிர்கொண்டார்.

பந்து பேட்டில் படாமல் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் சென்றது. ரன் அவுட் செய்ய ஸ்டம்புகளை நோக்கி பண்ட் வீசிய பந்து மிஸ் ஆனது. இருந்தாலும் மற்றுமொரு வாய்ப்பு. இப்போது அர்ஷ்தீப் சிங்கிற்கு. அவரும் ரன் அவுட்டை தவற விட, அந்த கேப்பில் 2 ரன்களை ஓடி வெற்றியை உறுதி செய்தது இலங்கை அணி.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் இந்திய அணி தோற்றுவிட்டது. இப்போது இலங்கையுடனும் தோல்வி. இந்த இரு தோல்விகளுக்குப் பிறகும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

இலங்கையுடனான போட்டியில் என்ன நடந்தது?பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது செய்த அதே தவறுகளை இந்தியா மீண்டும் செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவின் தொடர் தோல்வியால் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடியன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதிலாக அஷ்வின் தேர்வ செய்யப்பட்டார். முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 72 ரன்கள் விளாசினார்.

கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி இந்த முறை மதுஷனகா பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் இந்த முறையும் சோபிக்கவில்லை.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

தீபக் ஹூடா ஒரு ஃபினிசர் இல்லை. ஆனால் இந்தியா அவரை தாமதமாக களமிறக்கி அவருக்கு மேலும் நெருக்கடி அளிப்பதாக ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார். அதேபோன்று டெத் ஓவர்களில் சிறப்பாக பேட் செய்ய இந்தியாவுக்கு சரியான வீரர் இல்லை எனவும் மிடில் ஓவர்களில் இந்தியா பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

இதனிடையே 174 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் ரிஷன்கா, குசல் மெண்டிஸ் இருவரும் அரைசதம் விளாசினர். 11 ஓவர்கள் வரை இலங்கையின் கை ஓங்கி இருந்தாலும், சஹலின் சுழற்பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்த விக்கெட்களை கைப்பற்றியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி கட்டம் வரை நகர்ந்தது.

டெத் ஓவர்களில் தடுமாறும் புவனேஸ்வர்

2 ஓவர்களில் இலங்கை வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் 19வது ஓவரை வீசினார்.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

முதல் 2 பந்துகளும் சிறப்பாக வீசப்பட்ட நிலையில் அடுத்த 2 பந்துகள் வைடாக மாறியதால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அடுத்தடுத்து 2 பவுன்டரிகளை விளாசி புனவேஸ்வரின் டெத் ஓவரில் 14 ரன்களை சேர்த்தது இலங்கை. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 பந்தை மீதம் வைத்து, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இலங்கை அணி.

புவனேஸ்வர் குமாரின் டெத் ஓவர்கள் தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவர் வீசிய 19வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

புவனேஸ்வருக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை 19வது ஓவரை வீச ரோஹித் சர்மா முன் வந்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இதற்கு ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்

எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் அவர்கள் சில நேரங்களில் ரன்களை அவர் விட்டுக்கொடுப்பார்கள். புவி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு பல சமயங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக ரோஹித் சர்மா குறிப்பிட்டார்.

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,FRANCOIS NEL / GETTY IMAGES

'தவறுகளில் இருந்து பாடம் பெறுவோம்'

நாங்கள் 10 - 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து விளையாட வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

Presentational grey line
Presentational grey line

இந்தியாவுக்கு முதலில் பேட் செய்வது தற்போது சவாலாக மாறியுள்ளது. தீபக் ஹூடாவுக்கு இந்த முறையும் பந்துவீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேசமயம், ஃபினிசர் ரோலில் அவரை களமிறக்கி சோதனை முயற்சியில் இறங்கியது இந்திய அணி. அதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியிருந்தாலும் டெத் ஓவர்களில் இந்தியாவுக்கு கூடுதல் ரன்கள் கிடைத்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?

சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால் இனி இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். அந்த வகையில் அடுத்த நடைபெறக் கூடிய மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அந்த சொற்பமான வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

புதன்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை பாகிஸ்தான் அணி தோற்றாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது.

கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால்தான் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஒருவேளை அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும்.

அதாவது அடுத்து வரக்கூடிய ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும். இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பாலியல் லஞ்சம் கோரிய அரசியல் கட்சியின் யாழ். அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது!

www.pungudutivuswiss.com

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று  உத்தரவிட்டார்.

சுவிசில் 23 புலம்பெயர்ந்தவர்கள் கைது

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் வீதிப் போக்குவரத்தின் போது ஏற்பட்ட வாகன நிறுத்தத்தின் போது விநியோகம் செய்யும் சிற்றூர்தி ஒன்றின் பின்புறத்தில் 23 புலம்பெயர்ந்தவர்கள் இருந்ததைக்

ஆசிய கோப்பை: இந்தியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
இந்தியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு

ad

ad