புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2011


சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரட்னத்தை ஐ.எம்.எவ் தலைவராக நியமிக்க வேண்டும்!

Published on May 20, 2011-11:19 pm   ·   No Comments
சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின்  (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடப்பிடமாக கொண்ட தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் நியமித்துள்ளார்.
அந்நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவராகவும் பொருளாதார நிபுணராகவும் உள்ள  சண்முகரட்னம் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் ( Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தெற்காசிய நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர்.  இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதித்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
தற்போது தர்மன் சண்முகரத்தினம் சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினராக உள்ளார்.
ஆனால் உலகின் முன்னணி பொருளியியல் வல்லூனர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி அமைச்சர்கள் என பலரும் இப்பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியா தென்னாபிரிக்க போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்த பதவியை பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் ஐ எம் எப்பின் தலைமைப் பதவியை எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சில ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டனர். ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கல் ஐரோப்பியர் தலைவராக வேணடும் என்பதை வலியுறுத்துவதில் முன்னணியில் இருக்கிறார். யுரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஐரோப்பா சர்வதேச நாணயநிதியத்தை எதிர்பார்த்து இருக்கிறது என ஐரோப்பிய தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பதவி ஐரோப்பிய நாடு ஒன்றிற்கே வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இம்முறை இப்பதவிக்கு தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் போட்டி எழுந்துள்ளது.
இஸ்ரேல் மத்திய வங்கி ஆளுநர் ஸ்ரான்லி பிஷெர், எகிப்து முதலீட்டுச்சபை நிறைவேற்று பணிப்பாளர் முகமட் எல் எரின், ஜேர்மன் முன்னாள் நிதியமைச்சர் ஸ்ரெயின் புருஷ், பிரித்தானிய முன்னாள் தலைமை அமைச்சர் கொர்டன் பிரவுண், முன்னாள் ஜேர்மன் மத்திய வங்கி தலைவர் அலெக்ஸ் வெபர், இந்திய தலைமை அமைச்சரின் பொருளாதார ஆலோசகர் மொன்டெக் சிங், முன்னாள் துருக்கி பொருளாதார அமைச்சர் கெமல் டெர்விஷ், பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்ரினா லார்டே, முன்னாள் தென்னாபிரிக்க நிதி அமைச்சர் ற்ரெவொர் மானுவெல், மெக்சிக்கோ மத்திய வங்கி ஆளுநர் ஒகஸ்டின் கார்டென் உட்பட பலரும் இப்பதவிக்காக போட்டியிட உள்ளனர்.
இந்த உலகத்தலைவர்களுடன் சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தின் பெயரும் முன்மொழியப்படுகிறது. ஆனால் இந்த பதவியை பெறும் நோக்கம் தனக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.                                                                       மிக மோசமான     குற்றவாளிகள் அடைக்கப்பட்டபகுதியில் கனிமொழி!

Published on May 20, 2011-11:40 pm   ·   No Comments
டில்லி திஹார் சிறையில் மிக மோசமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் 6ஆம் இலக்க பிரிவிலேயே விளக்கமறியல் கைதியான கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் மற்றொரு கைதி அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையின் 10 அடிக்கு 15 அடி அளவுள்ள அறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுpறையில் கனிமொழிக்கு தொலைக்காட்சி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. தினசரி பத்திரிகைகளும் வழங்கப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.                                                 

சென்னை மரினா     கடற்கரையில் நடை பெற்ற முள்ளி வாய்க்கள் நினைவு -திரண்ட பெண்கள் கூட்டம் ..!video

Short URL: http://www.ethirinews.com/?p=6905
நாடுகடந்த  அரசில்  விலகியவர்களிர்க்கான   தேர்தல் -    ந ,க ,த ,அ ,    அறிவிப்பு ..!

ஈழ முரசு விக்கி லீக்ஸ் என்ற மாய தொடரை ஆரம்பித்து நாடு கடந்த அரசின் மீது  தமது தனி  நபர் தாக்குதல்களை நடத்தி வருவது இங்கே சுட்டி கட்டதக்கது .
நாடு கடந்த அரசின் பிரதமரை தெரியாது திண்டாடும் பதிவு ..!படித்தால் சிரிப்பு வரும் ..!

உலக போரியல் வரலாற்றின் முன்னோடிகளாகவும் ஊடக யாம்பவாங்கலாகவும்
தம்மை தாமே அறிவித்து கொள்ளும் பதிவு என்ற தேசவிரோத இணையம்
தமிழ் மக்களினால் அங்கீகாரம் வழங்க பட்டு அவர்களின் ஆணையுடன் யனநாயக வழியில்
தெரிவு செய்ய பட்ட நாடு கடந்த அரசின் பிரதமரை தமக்கு யார் என தெரியாது என கூறி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது .
இந்த நெடியவன் நோர்வேயில பாடசாலை ஒன்றில் சுத்தம் செய்யும் தொழில் ஈடுபட்டுள்ளாரம் என பதிவு காரர் கூறுகின்றனர் .
அப்படியானால் அடக்குமுறைக்கு உட்பட்டு அசிங்க பட்டு வாழும் மக்களின் கண்ணீரையும் துயர் தோய்ந்த அவர்களது இருண்ட வாழ்விற்கு விடுதலை வாங்கி தர ஏன்இந்த நெடியவன் ஐயா பகிரங்க வேலை திட்டத்தில் ஈடுபடவில்லை ..?
இதனை அறியாது பதிவு கார ராசாக்களே நீங்கள் தமிழ் தேசிய அரசியல் பேசுவது சீர்கேடிதனம் .
உங்கள் இன்றைய நிலை உருத்திர குமாரினையும் அந்த நாடு கடந்த ஆரசினையும் இல்லாதொழித்து
தமிழ் நெட் சேரமான் என அலையும் ஜெயாவும் திருசெல்வமும் நோர்வே முரளியும் பதிவியில் இருந்து மக்களை ஆழ வேண்டும் என்ற நப்பாசையில் இவ்விதமான செயல் பாடுகளில் ஈடு பட்டுள்ளீர்கள் .
தொடர்ந்து திட்டமிட்டபட்டு உங்கள் இந்த நாசகார வேலைகள் செய்ய முற்பட்டால் ஜேர்மன் கிளை பொறுப்பாளரின் தற்போதைய அடாவடி தொடர்பாக எமக்கு பல மக்கள் நேரடி முறைப்பாடு செய்துள்ளார்கள் .
அதை நாம் வெளியிட்டால் நீங்கள் கம்பிசிறைக்குள் உள்ளாக நேரிடும் அதனை விரும்பின் தொடர்ந்து உங்கள் ஊழிகூத்துக்களை நடத்துங்கள் .
Short URL: http://www.ethirinews.com/?p=6853
இலங்கை செல்ல வேண்டாம்! நெதர்லாந்து எச்சரிக்கை

E-mailஅச்சிடுகPDF
நெதர்லாந்துப் பிரஜைகள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என நெதர்லாந்து வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

நெதர்லாந்தில் கோடைக் கால விடுமுறை நெருங்கி விட்டது.

நெதர்லாந்து நாட்டவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்கின்றமைக்கு தயார் ஆகின்றனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்கின்றமைக்கு பாதுகாப்பான நாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற நாடுகள் எவை? என்கிற விபரப் பட்டியல் ஒன்றை நெதர்லாந்து வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டு உள்ளது.

இதிலேயே இலங்கை செல்ல வேண்டாம் என்று எச்சரித்து உள்ளது. 
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரு வருடங்கள் ஆகி விட்ட போதிலும் புலி ஆதரவாளர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர், இலங்கையில் புதிய தாக்குதல்கள் இனி மேல் நடக்காது என்று உத்தரவாதம் தர முடியாது என்று இவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.                                
மஹிந்தருடன் வெசாக் கொண்டாடிய மனிஷா கொய்ராலா!

E-mailஅச்சிடுகPDF
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெறுகின்ற சர்வதேச பௌத்த திரைப்பட விழாவில் கலந்து கொள்கின்றமைக்கு இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான மனிஷா கொய்ராலா வருகை தந்து உள்ளார்.

இலங்கைக்கான இவரின் முதலாவது விஜயம் இதுவே. இவர் வெசாக் பண்டிகை தினத்தில் தானசாலை ஒன்றுக்கு சென்று உணவும் சாப்பிட்டு உள்ளார். இவர் நேபாள நாட்டில் பிறந்தவர். ஒரு பௌத்த சமயி ஆவார்.
புங்குடுதீவு புனித சவீரியார் ஆலய வருடாந்தத் திருவிழா 
காலம் கணித்தறிய முடியாத பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென் கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534இல் போர்த்துக்கல் அரசனால் கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையானது அவர்களின்
வாழ்க்கையினை இறைவன் பக்கம் திருப்பியது. 1545 இல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரத கிறிஸ்தவர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இதனால் அச்சமூகத்தினரில் பலர் தமது தாயகத்தை விட்டு வெளியேறி பலதீவுகளில் குடியேறினர்.

இவர்களில் பலர் புங்குடுதீவின் தென்கீழ் முனையிலும் குடியேறினர். இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் இந்து ஆலயங்கள் மத்தியில் நடுநாயகமாக விளங்கும் புனித சவேரியாரின் ஆலயமாகும். இவ்வாலயத்தின் வரலாறு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும். ஆரம்பகால கட்டத்தில் சிறு ஆலயமாக உருவெடுத்து தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. அந்நாளில் இந்தியாவில் கிறிஸ்தவ மக்களுக்கெதிரான போராட்டத்தில் பரத குல மக்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.

இக் கொடுமைகளை தாங்கமுடியாத மக்கள் தாயகத்தை விட்டு வெளியேறி கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கி இலங்கை வடபுலத்தில் உள்ள தீவுகளில் குடியேறினர்.  இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தரையிறங்கி தென்பகுதியில் குடியமர்ந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியாரின் போதனைப்படி இறைவாழ்வு வாழ அவர்கள் தவறவில்லை. அவர்களின் ஜீவனோபாயமாக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு சிறப்புற வாழ்ந்தனர்.

இக் காலகட்டத்தில் தமது தொழில் நிமித்தம் கரையோரமாகச் சென்ற போது பேழை ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைக் கண்டு மகிழ்வுடன் அதை எடுத்துக் கொண்டு தம் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியில் தங்கள் பாதை மாறித் தீவின் மத்தியை அடைந்தார்கள்.
ஒரு ஆலமரம் பற்றை, புதர்கள் உள்ளகாடாக இருந்த படியினால் ஆலமரத்தின் கீழ் இளைப்பாறினார்கள்.

தாங்கள் பாதை மாறி வந்ததை உணர்ந்த அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர ஆயத்தமாகி பேழையைத் தூக்கினார்கள். அவர்களால் அதை அசைக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு ஆச்சரியம் மேலிடவே உடனே பேழையை உடைத்தனர். அதனுள் புதுப்பொலிவுடன் ஜோதியாய் ஒளிவீசும் புனித சவேரியாரின் திருச்சுரூபம் இருக்கக் கண்டு மெய்சிலிர்த்தது.  உடனே முழங்கால் படியிட்டுச் சுரூபத்தை வணங்கினர். பின் பேழையை ஆலமரத்தின் கீழே விட்டுவிட்டு வீடு சென்று சகலருக்கும் இச் செய்தியை அறிவித்தனர்.

பின்பு புனித பிரான்சிஸ் சவேரியார் தம்மை திருமறைக்கு திருப்பியதுமல்லாமல் கடல் கடந்த நாட்டிலும் தங்களுக்கு பாதுகாவலராக இருந்தார். இவரது திருச்சுரூபம் பெற்றதால் பரதகுல மக்கள் மகிழ்ந்ததுடன் தமது நன்றிப் பெருக்காகப் புனிதர்களுக்கு ஆலயம் அமைத்து வணங்கி வருகின்றனர். புனிதரின் திருச்சுரூபம் கிடைக்கப்பெற்றுப் பிரதிஸ்னம் அமைந்துள்ள அத்தினத்தையே வருடம் தோறும் வைகாசி மாதம் 20 ஆம் திகதி புனிதருக்கு விழா எடுக்கின்றனர்.

தற்பொழுது மக்கள் மீளக்குடியேறிய பின் சகல பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும் ஆலய புனரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. ஆலயத்தின் சிறப்பைக் கேள்வியுற்ற வடமாகாண ஆயர் அதிமேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகம் அங்கு விஜயம் மேற்கொண்டு ஆலயத்தைப் பார்வையிட்டுச் சென்றார்.  ஆலயத்திற்கு நிரந்தரப் பரங்குத் தந்தையாக அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரை நியமித்தார்.

அவர் பல வழிகளிலும் பங்கு மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றி வருவதுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் முயற்சி எடுத்து பாடசாலை முன்பள்ளி, கணினி வகுப்புகள், தையல் வகுப்புகள் ஆகிய துறைகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து சேவையாற்றி வருகிறார்.
அத்துடன் தோமஸ் சவுந்தரநாயகம் கணினிப் பாடசாலை மேதகு ஆண்டகை தோமஸ் சவுந்தரநாயகத்தினாலே ஆரம்பித்து வைக்கப்பட்டது சிறப்பு அம்சமாகும்.

கோவிலின் கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி முன்போர்ட்டிக்கோ, மணிக்கூட்டுக் கோபுரம் ஆகிய வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகிறது.  இத்துடன் கோவிலின் வருடாந்தத் திருவிழா அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் 11.05.2011 புதன்கிழமை புனிதரின் நவநாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை கூட்டுத்திருப்பலியுடனும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருச்சுரூப பவனியுடனும் அவரின் ஆசியுடன் திருவிழா இனிதே முடிவெய்தும். கொழும்பில் வாழும் பங்கு மக்கள் அனைவரும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை புனிதவியாகுல அன்னையின் ஆலயத்தில் 21.05.2011 மாலை 5 மணிக்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
யோ.றிட்சார் டோமினிக்

விளம்பரம்

ad

ad