-
31 ஜன., 2023
வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த முதலிகேவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
8 கோடி ரூபா திட்டத்தை இடைநிறுத்திய ஆனோல்ட் - மணிவண்ணன் கண்டனம்!
யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் உத்தரவிட்டதை, யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார் |
வந்த வேலையை முடித்து விட்டார் சுமந்திரன்! - தவராசா சீற்றம்
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதை சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார் |
சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்கும் சாத்தியம் இல்லை! - விக்கி கைவிரிப்பு
கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |