இழுவைப் படகை பயன்படுத்துவது தவறு; ஒப்புக்கொண்டது - தமிழக குழு
எதுவானாலும் எல்லை மீறினால் கைது செய்வோம் - இலங்கை மீனவர் குழு
மீனவர் குழுக்களின் பேச்சு சுமுகம்: இருநாட்டு அரசுகளே இறுதி முடிவு
* அடுத்த சுற்று பேச்சு இலங்கையில்
* 14 நாள் கால அவகாசம் கோரியது தமிழகக்குழு
இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நேற்று சென்னையில் நடைபெற்ற முதற்சுற்று பேச்சுவார்த்தை சற்று காரசாரமாக ஆரம்பித்து மாலையில் சுமுகமாக நிறைவடைந்தது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் இருதரப்பும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தனர்.