புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2020

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!


தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொல

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக

சற்று முன்: 5,903 பேருக்கு லண்டனில் கொரோனா தொற்று: பல மடங்காக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 10,000 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தியே இந்த 6,000 பேரை இவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்

1390 - இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்; பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

நாட்டில் காணப்படும் அச்சுறத்தலான சூழ்நிலை காரணமாக மருத்துவர்கள் சங்கம் ஓர் தொலைபேசி இலக்கம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நோயாளர்கள் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டு தங்களது

புலம்பெயர் தேசத்தில் கொரோனாவால் அடுத்தடுத்து பலியான ஈழத்தமிழர்கள்; பெரும் சோகம்

அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம் இந்தியப்பிரதமர் மோடியை  தொடர்பு கொண்டு   க்ரோங்கோளே மருந்து மாத்திரைகளை  அதிக அளவில்  அனுப்பி வைக்குமாறு  கேட்டுக்கொண்டார் 
புங்குடுதீவில் பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கமும் பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் இணைந்த 28லட்டசம் ரூபாய் பெறுமதியான மாபெரும்நிவாரணப்பணி
28லட்டசம் ரூபாய் பெறுமதியான உணவுப்பொருட்களை புங்குடுதீவில் வாழும் சகல மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் உயிர்நேயப்பணியில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் இடர்கால உதவிக்குழுவினருடன்இணைந்து பாரிஸ் ராசன், பாபுஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் யாரும் எதிர்பாராத புங்குடுதீவு மக்களை நன்றிக்கரம் கூப்ப
போராட்டகாலம் சுனாமி போன்ற இயறகை அனர்த்தவேளையிலும் கைகொடுத்த புலம்பெயர்  தமிழர் இப்போதும்  தாயக உறவுகளை காத்து வருவதில் முன்னிற்கின்றனர் ,பாராட்டுக்கள் 
பிரான்ஸ் பாரிஸ் புறநகர் சென்டெனிஸ் இல் கொரோனா தாக்கத்தின் உச்சம்
பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியான (93) சென்டெனிஸ் நகர்  கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது . ஆரம்பத்தில் இங்குள்ள மக்கள் கட்டுப்பாடடை  கடைபிடிக்காததாலேயே இந்த உச்சகடட பாதிப்பு நிலை  வந்துள்ளது   இங்கும்  தமிழ்மக்கள் அதிக அளவில்  வசித்து வருவது குறிப்பிடத்தக்கது 

கனடாவில் இன்று அதிகாலை வரை 187 பேர் பலி! - 12,547 பேருக்குத் தொற்று

கனடாவில், இன்று அதிகாலை 4 மணி வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 187 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 12,547 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் நேற்று 27 பேர் கொரோனாவுக்குப் பலி

கனடா- ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின்
யாழ் அரச அதிபரின் அறிவிப்பு
-------------------------------------------------
சமூர்த்தியால் வழங்கப்படும் நிவாரணம்  மற்றும் கடன் சம்பந்தமான முறைகேடுகள் இருப்பின் உடனே  அறிவிக்கலாம் . சமுர்த்தி உத்தியோகத்தர் யாராவது   சரியாக செயல்படாமை, தவறான வார்த்தை பிரயோகம், கண்ணியமில்லாமை ,நிவாரணம் வழங்க மறுத்தல் போன்ற  செயலில் ஈடுபட்டாலும் அறிவிக்கலாம். இது போன்ற செயல்படட மருதங்கேணி உத்தியோகத்தர் மாற்றம் பெற்றுள்ளார்  அதோடு அவர் மீது விசாரணையும்  எடுக்கப்பட்டுள்ளது 
சர்வோதயத்தினர் புங்குடுதீவில்  ஆங்காங்கே  சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோருக்கு மட்டும் நிவாரணம் வழங்கினர் 
4 பேர் கொண்ட குடும்பத்துக்கு  4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2  கிலோ சீனி 250  கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில்  புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் இன்று  கேரதீவு ஊரதீவு பகுதிகளுக்கு நிவாரணம்  வழங்கினர்  அங்கத்தவர் எண்ணிக்கையை பொறுத்தே இந்த நிவாரணம்  வழங்கப்பட்ட்து 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை

கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சுவிஸ் கொரோனா நிலைமை
-----------------------------------------------
நோய் தோற்று வரைபின் படி கடந்த 21ஆம்  திகதி 1947 பேருக்கு  தொற்று வந்துள்ளது  அதியுச்ச எண்ணிக்கை இதுவென்றும் தெரிகிறது  தொடர்ந்து குறைவது போல  காணப்பட்ட்து  ஆனாலும் மீண்டும் சற்று கூடி உள்ளது கடந்த நாட்களில் தொற்று எண்ணிக்கை இப்படி அமைகிறது .மார்ச் 22 -901 , 23 -1046, 24-1609, 25-1079,26-989, 27-1466. 28- 981 29-775,30-963  31-683, ஏப்ரில் 01- 1163,01-1059,03-879,04-783.
 இதுவரை 1 லட்ஷத்துக்கும் மேல்பட்டொருக்கு  சோதனை நடந்துள்ளது
.அதில் 20 540 பேருக்கு  கொரோனா தொற்று கண்டிருக்கிறது .
சுமார் 540 பேர் முற்றிலும்  குணமாகி உள்ளனர்
இறப்பு எண்ணிக்கை  643 ஆகி உள்ளது  
ஆரம்பத்தில் டெஸ்ஸின் ஜெனீவா வோ வாலிஸ் மாநிலங்களில் அதிக பாதிப்பு  .இருந்தது .பின்னர்  அது  சூரிச் பெர்ன் பிரிபோர்க் பாசெல் மாநிலங்களுக்கும் கூடி உள்ளது 31  வயது முதல்  83  வயது வரை  தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்
இறந்தவர்களில் 64 வீதமானோர்  ஆண்கள், .தொற்றுக்குள்ளாவோரிலும் ஆண்களே அதிகம்
இறந்தவர்களில் 94 வீதமானோர்  (சக்கரை வியாதி ,நுரையீரல் பாதிப்பு ,இதயம் சம்பந்தமானவை  போன்ற )முன்னரே எதாவது  ஒரு  நோயுள்ளவர்களாகவே  இருந்துள்ளனர்
டொச் மொழி மாநிலங்களில் அரசின் அவசரகால  விதிகளை கூடுதலானோர் கடைபிடிக்கின்றனர் 
 செங்காளன் மாநிலத்தில்  இளம்பராயத்தினர்  5  பேருக்கு மேல் கூடுவது பொழுதுபோக்குவது பொது இடங்களில் கூடுவது என  கட்டுப்பாடடை மீறுகின்றனர்


கொரோனாவை எதிர்கொள்ள அரசு நிர்வாணமாக அனுப்புகிறது! பிரான்ஸ் செவிலியர்கள் வேதனை

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள

மக்களுடன் முரண்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்

மக்கள் எழுச்சிக்கும் ஊடகங்களின் பங்களிப்புக்கும் கிடைத்த வெற்றி.மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தர்இடமாற்றம் ,விசாரணை
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்து கொண்டு மக்களை

வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை0777 781 891 WhatsApp

முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம், திரும்ப வேண்டிய சொந்த முகவரி, சொந்த பிரதேச செயலக பிரிவு, தொலைபேசி இலக்கம், தற்போது தங்கியுள்ள முகவரி உள்ளிட்ட விபரங்களை திரட்டி கீழக்காணும்

ஊரடங்கு தொடருமா? வெளியானது முடிவு

யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (05) சற்றுமுன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பஹ்ரைன் வழியான பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து ஆரம்பம்!

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் வழியாக போக்குவரத்து சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad