பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் மாபெரும் கண்டன பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த போராட்டம், இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். |
-
30 ஜன., 2024
இன்று கொழும்பை முடக்கும் பாரிய பேரணி]
29 ஜன., 2024
ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம் மீது தாக்குதல்: 3 படையினர் பலி! 34 படையினர் காயம்!
கலகத்தில் ஈடுபட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளது |
அந்தரத்தில் தமிழரசுக் கட்சி- மாவையே தலைவராக நீடிக்கிறாராம்!
திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தெரிவு தொடர்பாக அறிவிக்கப்பட்ட முடிவுகளை அப்படியே அந்தரத்தில் பேணவும், இறுதித் தீர்மானங்களை எடுப்பதைத் தள்ளிப் போடவும் நேற்று மதியம் மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார் |
இரண்டு மூன்று துண்டுகளாக உடைந்தது தமிழரசு
இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். |
28 ஜன., 2024
பிகார் முதல்வராக நிதிஷ் குமார் 9-வது முறையாக பதவியேற்பு - பாஜகவுக்கு 2 துணை முதல்வர்கள்
சிறிதரன் அழைப்புக்கு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் நிபந்தனை
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததைப்போன்று ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதற்கான பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ள நிலையில், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கூட்டுக் கட்சியாக பதிவு செய்ய வேண்டும், பொதுச்சின்னமொன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளன. |
27 ஜன., 2024
தமிழரசின் பொதுச்செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு- குகதாசன் வெற்றி!
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
26 ஜன., 2024
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்துள்ள 11 கோரிக்கைகள்!
ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வான தீர்வை பெறுவதற்காக நாங்கள் முன்வைக்கும் 11 கோரிக்கைகளை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா தெரிவித்தார். |
காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள்!
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
பவதாரிணி
25 ஜன., 2024
கந்தகாட்டில் மீண்டும் பதற்றம் - மோதலை அடுத்து 40 கைதிகள் தப்பியோட்டம்
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது |
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி! Top News
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் |
24 ஜன., 2024
பெலியத்த படுகொலைகள் - முக்கிய சூத்திரதாரி கைது
பெலியத்தவில் திங்கட்கிழமை ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. |
ஆனையிறவில் அதிகாலையில் கோர விபத்து! - ஒருவர் பலி, 8பேர் காயம்.
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் |
23 ஜன., 2024
21 ஜன., 2024
வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் நாளை விசாரணை
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது |
19 ஜன., 2024
யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா
யாழ்ப்பாணத்தில் தமிழர் பெருவிழா , யாழ்ப்பாணம் சர்வோதய மண்டபத்தில் ஜனவரி 20 முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. |
ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்பாடுகள் தொடங்கின
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு செய்துவருவதாக ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
அரசின் செயற்பாடுகளை ஜெனிவாவில் அம்பலப்படுத்துவோம்
மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கினால் மேலும் இருவர் மரணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார். பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது |
ஸிம்பாப்வேயுடனான கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றியது
சுமந்திரன் தலைவரானால் தமிழரசில் தமிழ்த் தேசியம் அழிந்து விடும்
சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியில் இருந்து தமிழ்த் தேசியம் இல்லாது போய்விடும் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார் |
18 ஜன., 2024
15 நாட்களில் 1 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இந்த வருடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. |
மஹிந்தவுடன் இணையத் தமிழர்கள் தயார் இல்லை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியை அமைக்க தமிழர்களோ, தமிழ் மக்களின் பிரதிநிதிகளோ எந்த விதத்திலும் தயாராக இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார் |
முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முதலில் நடைமுறைப்படுத்துங்கள்
இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது இதுவே முதல்முறை!
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
17 ஜன., 2024
பாடசாலை விடுமுறை நாட்களில் ஏற்பட்ட மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு
ஜனாதிபதியின் செலவுக்கு ஏன் 2 ஆயிரம் இலட்சம் ரூபா?
சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் போது நிதி இல்லை என அரசாங்கம் கூறுகின்ற சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக மேலும் 2000 இலட்சம் மேலதிக மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் |
பிக் மீ சாரதி, பயணி மீது தாக்குதல்
கோண்டாவிலில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் PickMe சாரதி ஒருவர் மற்றொரு ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று மதியஇடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார் |
16 ஜன., 2024
பாரிய கூட்டணியின் வேட்பாளராக ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய கூட்டணியின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என சண்டேடைம்ஸ்தெரிவித்துள்ளது |
13 ஜன., 2024
யுக்திய நடவடிக்கை - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை
இலங்கை எதிர்கொள்ளும் போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அதிகாரிகள் பாதுகாப்பினை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை வெளியிட்டுள்ளது. |
இராணுவ வாகனம் மோதி பிரதேச செயலக பணியாளர் மரணம்]
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் |
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்
[Saturday 2024-01-13 16:00]
ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்கள் முயற்சியா?-மறுக்கிறார் சஜித்.
ரணிலையும் சஜித்தையும் இணைக்க வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதனை முற்றாக நிராகரிக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் |
மத்திய ஆபிரிக்க குடியரசில் கவிழ்ந்து கிடக்கும் இலங்கை விமானப்படையின் ஹெலி
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது. |
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு! [Saturday 2024-01-13 06:00]
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார் |
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 19 பேர் காயம்! - 60 பேர் தப்பியோட்டம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
12 ஜன., 2024
கெஹலியவை பாதுகாத்த 113 எம்.பிக்களும் தேசத் துரோகிகள்!
மருந்து கொள்வனவு திருட்டில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவையும் இந்தக் குழுவையும் பாதுகாக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கைகளை தூக்கினர். இந்த 113 பேரும் நாட்டுத் துரோகிகள், தேசத் துரோகிகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். |
புலிகளுக்குப் பணம் கொடுத்தது யார்? சபையில் வாதப் பிரதிவாதம்.
விடுதலை புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியது யார் என்பதை நாங்கள் தெரிவிக்க தேவையில்லை. அதனை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொள்ளங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார். |
பிரித்தானியாவை சூழும் 14 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர்!
14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவை பிரித்தானியா வரும் வாரங்களில் எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்பொழிவையும் கடுமையான ஆழ்ந்த குளிரையும் எதிர்கொள்ள உள்ளது. |
ரொறன்ரோவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறித்து எச்சரிக்கை ரொறன்ரோவில் எதிர்வரும் நாட்களில் கடும் பனிப் புயல் தாக்கம் ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காற்றுத் தாக்கம் காரணமாக சுமார் 20 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது |
தமிழரசு தலைவர் என்ன முடிவு?
அம்பியுலன்ஸ் படகு வர தாமதமானதால் இளைஞன் உயிரிழப்பு!
உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றது |
துறைமுக அதிகாரசபையின் செலவில் 50 எம்.பிக்கள் 2 கப்பல்களின் உல்லாசப் பயணம்!
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டினார் |
Top News
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். |
தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு! - இன்றைய பேச்சு தோல்வி.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவை ஒருமனதாக நடத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தலைவர் பதவிக்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது |
சபரிமலைக்குச் சென்ற யாழ். ஐயப்ப பக்தர் நடுவானில் மரணம்!
கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நடுவானில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்த 49 வயதுடைய மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். |
10 ஜன., 2024
கறுப்பு உடையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! [Tuesday 2024-01-09 18:00]
மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். |
மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார் |
நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி! - யாழ்ப்பாணமும் செல்கிறார்.
பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது. |
நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. |
வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் 22ஆம் திகதி விசாரணை!
2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. |
8 ஜன., 2024
ல்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவுர்
குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
அடுத்த வாரம் கொழும்பு வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு:
நாட்டின் சமகால பொருளாதார நிலவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். |
4 ஜன., 2024
ரணிலுக்கு எதிரான போராட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. |
3 ஜன., 2024
அலெக்ஸ் மரணம் ஆட்கொலை என தீர்ப்பு! - ஐந்தாவது பொலிஸ் அதிகாரியையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு. [Wednesday 2024-01-03 16:00]
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் "மனித ஆட்கொலை" என யாழ்.நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. |