-
16 ஜூன், 2014
சர்வதேச விசாரணை கானல் நீர் அல்ல ; பாஸ்கரா
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு கானல் நீர் என இந்த அரசு கூறிக்கொண்டிருப்பது அது அவர்கள் காணும் பகல் கனவு என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் பாஸ்கரா தெரிவித்தார்.
எமது நிலமே எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ; கோப்பாயில் மக்கள் ஆர்ப்பரிப்பு
வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கெஹலியவின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
அளுத்கம, தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் அமுல்
பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து இன்று மாலை முதல் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பௌத்த பிக்கு ஒருவரின் சாரதியை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, இன்றுமாலை பொதுபல சேனாவினர் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தனர்.
இதையடுத்து இரண்டு பிரிவு மக்களிடையில் பதற்ற நிலை ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஊரடங்குச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: சுவிட்சர்லாந்து அணி வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வென்றது. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற வைத்தார் செபரோலிக். முன்னதாக சுவிட்சர்லாந்து அணியில் மெக்மதி, குழுவடார் அணியில் வேலன்சியா தலா ஒரு கோல் அடித்தனர்.சுவிட்சர்லாந்து ஈகுவடோரை 2-1 என்ற ரீதியில் வென்றது.பிரான்ஸ் கொண்டுராசை 3-0 என்ற ரீதியில் வென்றது .இரு அணிகளும் ந்தல மூன்று புள்ளிகளை பெற்றுள்ளன
<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/pjgCxptnWeM" frameborder="0" allowfullscreen></iframe>
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)