தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரம்ராஜாவின் மகள் மெரின்
-
8 செப்., 2016
அதிபராக தேர்வானால் ஐ.எஸ். அமைப்பை ஒழிப்பேன்: ஹிலாரி கிளின்டன்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐ.எஸ். அமைப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று ஜனநாயக கட்சி
வவுனியாவில் கோர விபத்து:2மாணவிகள் படுகாயம் இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது http://www.tnnlk.com/?p=18595 .
வவுனியா வைரவர்புளியங்குளம் வீனஸ் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று தனியார் வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த வவுனியா கு
யாழ் . கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது.
யாழ் . கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் கைது.பிரபல பாடசாலையான யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர்
வவுனியாவில் கோர விபத்து:2மாணவிகள் படுகாயம்
சற்றுமுன் வவுனியா வைரவர்புளியங்குளம் வீனஸ் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று தனியார் வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பி
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு அதனால் இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து நிபந்தனைகள் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை இன்று கொழும்பில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒரு இனவாத பிரச்சினையாக சுட்டிக்காட்டபட்ட காலம் உண்டு. ஆனால் இது இனவாத பிரச்சினையல்ல மக்களுடைய தேசிய பிரச்சினை. இந்த நாட்டினுடைய அரசியல் பிரச்சினை. எனவே இந்த அரசியல் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் முதலாவதாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. இந்தநிலையில் 1971 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள். 1988, 1989 ஆம் ஆண்டுகளில் தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள், அக்கால அரசாங்கங்கள் அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்திருக்கின்றன. அதுபோல் 1987 ஆம் ஆண்டு வடக்கின் அரசியலோடு சம்பந்தப்பட்டு இந்த அரசாங்க த்தினு டைய செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படட்டவர்கள் காவலிலிருந்தபோது அவர்கள் விடு தலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில். 2001 ஆம் ஆண்டு 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் பல்வேறு முகாம்களில் இருந்திருந்தார்கள். அவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இவை எல்லாம் அரசியல் தீர்மானத்திற்கு ஊடாக எடுத்த செயற்பாடுகள். அதுமாத்திரமன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிராதன பங்கு வகித்தவர் பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்தவர் கடந்த கால அரசாங்கம் அவரை தம்மோடு இணைத்துக்கொண்டு தம்முடைய கட்சியின் உப தலைவர் பதவி கொடுத்து நாடாளுமன்ற அங்கத்துவ பதவி கொடுத்து அவரை அமைச்சராக்கி நாடாளுமன்றத்தை அலங்கரித்தது. அதேபோன்று இந்த நாட்டிலே தளபதிகளாக இருந்தவர்கள் சுதந்திரமாக உலா விக்கொண்டி ருக்கினறார்கள். எனவே அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படவேண்டும், நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல அவர்களுக்கு என்ன சுநத்திரம் இருக்கின்றதோ, எந்த சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதனை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 160 இற்கும் குறைவான சிறைக்கைதிகளுக்கும் கொடு ங்கள் என்று கூறுகின்றோம். யுத்தம் முந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. நல்லாட்சி என்றும் நிலைமாறுகால நீதி எனவும் நல்லிணக்கம் எனவும் கூறிக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாட்டில் ஒரு உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் முதலாவது அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைதுசெய்யப்ட்டிருக்கின்றார்கள் கட்டா யத்தின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் மூலம் இவர்கள் குற்றம்சும த்த ப்பட்டிருக்கின்றார்கள். எனவே இந்த அரசாங்கம் கூறுகின்றது பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச தரத்திற்கு அமைய கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல, இந்த பயங்கரவாத சட்டம் பல்வேறு விதமான குறைபாடுகள் நிறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக பயங்கரவாத சட்டம் காணப்படுகின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பாக நாங்கள் கூறுகின்றோம், அது பயங்கரவாத சட்டம் என்று கூறுகின்றோம். ஓர் அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து அரசாஙகம் அரச பயங்கரவாதத்தை நாடு முழுவதும் வியாபித்தது. தமிழ் மக்களை அழித்தது. கொன்றழித்தது. அந்த சட்டத்திறகு எதிராக நின்றவர்கள் தான் அரசியல் கைதிகளாக சிறைக்கைதிகளாக சிறையில் வாடிக்கெண்டிருக்கின்றார்கள். அவர்கள்விடுதலை செய்யப்படவேண்டும். சர்வதேசதரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி என்றால் என்ன? நாட்டினுடைய அரசியல் செல் பயணம் என்றால் என்ன? அவை எல்லாம் நாட்டு மக்களுக்கு ஏற்றவையாகவில்லை. ஏழை மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் இன்னும் ஒடுக்குகின்ற ஒன்றாகத்தான் இருக்கின்றது. அவை எல்லாவற்றிற்கும் எதிராக மக்கள் எழுகின்றபோது அவர்களை அடக்குவதற்காக சர்வதேச தரத்துடனான பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது. அப்போது சர்வதேசம் மௌனித்துவிடும் சர்வதேசம் அமைதி காக்கும். மக்கள் கைது செய்கின்றபோது சர்வதேசம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கிவிடும். இப்போது இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலான நாங்கள் ஒழிக்காவிட்டால் எதிர்காலத்தில் இதைவிட பயங்கரமான ஒன்றிற்கு குரல் கொடுக்க வேண்டி ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு எதிராக எடுக்கின்ற பொருளாதார திட்டங்களுக்கு எதிராக யாரெல்லாம் எழுகின்றார்களோ, எந்த அமைப்புக்கள் எழுகின்றனவோ அவைகளையெல்லாம் பயங்கரவாதியாக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றது. இந்த நிலையில் நாம் எல்லாம் ஒன்றுசேர்வோம் நாமெல்லாம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆரம்பித்திருக்கின்ற இந்த கையெழுத்து போராட்டம் நாடு முழுவதும் நடக்க விருக்கின்றது. எனவே நாடு முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்ற வேளையில் உங்க ளுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கின்றோம். நீங்களும் எங்களுடன் கைகோருங்கள், வடக்கு மக்களும் எங்களுடன் கைகோர்ப்பார்கள் நாடு முழுவதுமாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க அழைப்பு விடுக்கின்றோம். - என அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள
தேசியபிரச்சினையாகியுள்ள தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் கரிசனை எடுத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும்
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)