தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது. |
-
30 மே, 2023
வெர்சீனியாவில் மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு
கற்கோவளம் இளைஞன் கனடாவில் கடலில் மூழ்கி மரணம்!
கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞன் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. |
வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்
வடக்கு மாகாணத்தில் இந்த மாதத்தில் 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் |
புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் கொலை -ஆயுததாரிகள் பயன்படுத்திய வாகனம் மீட்பு!
லெப்டினன்ட் கேணல் துவான் முத்தலிஃப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான வர்த்தகர், பொரளையில் வைத்து அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் ஆவார். அவரை படுகொலைச் செய்வதற்கு வந்த ஆயுததாரிகள் பயன்படுத்தி கப் ரக வாகனம் இம்புல்கொடயில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. |
துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி
துருக்கிய-பல்கேரிய எல்லையில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் மத சிறுபான்மையினர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் பெறத் தவறினால் கடும் சிக்கல் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த புலம்பெயர் மக்கள் நீண்ட கால சிறைவாசம் அல்லது மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. அஹ்மதிய முறையைப் பின்பற்றுபவர்களே துருக்கிய எல்லையில் திரண்டுள்ளதுடன் ஐரோப்பாவிற்கு பாதுகாப்பாக செல்லும் முயற்சியில் இறங்கியவர்கள் |