இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.