-
7 நவ., 2019
கோத்தா வந்ததும் தூக்குவேன்- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும்
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்கும், ஆவணத்தை சமர்ப்பிக்க முடியுமா?
கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.
திஸாநாயக்கவின் இரு பாதுகாவலர்கள் கைது!
நுவரெலியா - கினிஹத்தேன, பொல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிசேனவின் இறுதி உரை இன்று
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு என்ன? இன்று அறிவிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு நியமனம் வழங்க அனுமதி
புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.பட்டப்படிப்பை நிறைவு செய்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கே இவ்வாறு வேலைவாய்ப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)