-
24 ஜன., 2023
நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா - தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்.
யாழ்ப்பாணத்தில் வீணை , மட்டக்களப்பில் படகு சின்னத்தில் போட்டி!
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் |
சுன்னாகத்தில் பட்டப் பகலில் வாகனத்தால் மோதி விட்டு வாள்வெட்டு! நால்வர் படுகாயம்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாம் பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது |
தற்கொலைக் குண்டுதாரிக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு மரணதண்டனை!
டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
சம்பந்தன், சுமந்திரனை நீக்கி விட்டோம்! [Monday 2023-01-23 18:00] |
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். |
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட்டுகின்றது. வீட்டுச் சின்னம் தான் தமிழர்களுடைய சின்னம் என்றும் தமிழரசு கட்சி தான் தமிழர்களுடைய கட்சி என்றும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒரு சூழ்நிலையில் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழரசுக்கட்சி இல்லாத 5 கட்சிகள் இணைந்து செயல்படுகின்றது. முதல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் இருந்த எம்.ஏ. சுமந்திரனும் இந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இ.கதீர் தெரிவித்திருந்தார். |
சம்பந்தர் தான் கூட்டமைப்பின் தலைவர்
ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் |
தர்மலிங்கத்தை படுகொலை செய்தவர்களுடன் மகன் கூட்டு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் |
சம்பந்தன், சுமந்திரனை விமர்சித்து வாக்குகளை கேட்கமாட்டோம்!
மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |