அலங்காரத்திருவிழா - ஞானலிங்கேச்சுரம் 2013
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை

இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின் மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப் நிறைவாகப் பெற அருள்புரிந்துள்ளான். சைவத்தமிழ்மக்கள் முன் சுவிஸ்நாட்டின் தலைநகரில் மிக விரைவில் தனக்கொரு கோவிலமைத்து இராசகோபுரத்துடன் நிலையாக எழுந்தருளும் வாய்பினையும் எமக்கு அளித்துள்ளான். நாளும் அடியர் வேண்டுவதனைத்தும் அளிக்கும் வள்ளல், முழுதிநாள்தேர்றும் நட்டம் பயின்றாடும் நாதன், நிலையான அன்புப் பிழம்பாக பேரரசி ஞானாம்பிகையுடன் திகழும் சிவமான ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் ஞானலிங்கேச்சுரத்தில் குருவருள், திருவருள் நிறைகொண்டு, சித்தர், ஞானியர், யோகியர் நல்லாசியுடன் சுற்அலங்காரத் திருவிழா நிகழும் விஜய வருடம் ஆடித்திங்கள் 31ம் நாள் முதல் ஆவணத்திங்கள் 11ம் நாள் வiர் திருப்பெரும் சிறப்புடன் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
காலம் | விழா |
15. 08. 13, வியாழக்கிழமை
17.00 மணிமுதல் | விநாயகர்கோமம்,
நவக்கிரககோமம். |
16. 08. 13, வெள்ளிக்கிழமை
16.30 மணிமுதல் | கொடியேற்றம், வரலக்குமிநோன்பு,
மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம் |
17. 08. 13, சனிக்கிழமை
16.30 மணிமுதல் | நாயன்மார்- திருவடிவழிபாடு |
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை
16.30 மணிமுதல் | குருந்தமரத்தடி அருட்கோலம் |
19. 08. 13, திங்கட்கிழமை
16.30 மணிமுதல் | பிட்டிற்குமண்சுமந்து
பிரம்படிபட்ட
பொன்மேனிக்கோலம் |
20. 08. 13, செவ்வாய்க்கிழமை
16.30 மணிமுதல் | பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம் |
21. 08. 13,புதன்கிழமை
16.30 மணிமுதல் | மாம்பழத்திருவிழா |
22. 08. 13, வியாழக்கிழமை
17.00 மணிமுதல் | வேட்டைத்திருவிழா |
23. 08. 13, வெள்ளிக்கிழமை
16.00 மணிமுதல் | சப்பறத்திருவிழா |
24. 08. 13, சனிக்கிழமை
08.00 மணிமுதல் | தேர்த்திருவிழா/
216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/
54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல் |
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை
06.30 மணிமுதல் | 6.30 மணிக்குயாகம்/
திருமஞ்சனவிழா-/
செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல் |
26. 08. 13, திங்கட்கிழமை
16.00 மணிமுதல | திருக்கல்யாணம் |
27. 08. 13, செவ்வாய்க்கிழமை
17.00 மணிமுதல | வைரவர்மடை |
இணையிலிப்பெருமான் பேரரருட் திருவிழாவில் கலந்து பெரும்பேறு பெற்றுய்ய சிவனடியார்கள் அனைவரையும் உளமார்ந்த பக்திப் பேரன்புடன் அழைக்கின்றோம்.