கடந்த (02.02.2016) இல் சிவபதமடைந்த எனது சகோதரர் அவர்களி ன் திதி தினமாகும் இன்று(20.02.2017). புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவரான இவரின் நினைவாக புங்குடுதீவு உலக மையம் கேட்டுக்கொண்டபடி கடந்த (06.02.2017)இல் மகா வித்தியாலய மகளிர் உதைபந்தாடட அணிக்கான முழு வீராங்கனைகளுக்குமான சீருடைகளை வாங்குவதற்காக 33 000 ரூபாவினை அதிபரிடம் வழங்கி ஊக்கமளித்திருந்தேன்
கமலாம்பிகை ப ம ச கனடா சுவிஸ் பிரான்ஸ் கிளைகளின்ஆ தரவில் நிகழ்ந்த இ லங்கையில் சக்திவள துறை கண்டுபிடிப்பு போட்டியில் முதலிடம்பெற்ற புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயம்மாணவன் டிலக்சனை பாராட்டும் விழா ////
வீரர்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகள் மோதிய 17 வது பெரும் தொடர் துடுப்பாட்ட போட்டியானது சமநிலையில் முடிவுற்றது.
இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதய கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதலாவது இனிங்சில்
சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலையிலான தனது அரசை நிருபிக்க கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!
2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.
பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.
வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.
மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.
எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல… கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு… பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!
பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல… அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.
பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.
வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து