புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2019

சுகாதாரச் சட்டங்கள் அனைத்து மாகாணங்களிலும் பின்பற்றப்படும் – பிரதமர் ஜஸ்ரின் உறுதி

கனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி

வெனிசூலா எல்லையை மூடிய அதிபர் -` வெளிநாட்டு உதவி பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க

வடக்கு பௌத்தர்களது பிரச்சினைகளை ஆராய கூட்டமாம்?

வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மைத்திரியில்

வடக்கில் அரசியல் துகிலுரிக் காட்சிகள்!

மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது என்பது தெரியாத நிலையிலும் தமிழ் அரசியல் அரங்கு அதற்குத் தயாராகிவிட்டது

எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் சாட்சியமளிக்கத் தயார் - சுகுணா

எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

சிறீலங்காவின் போர் குற்றம் ஐ.நா பாதுகாப்புச் சபையை நேக்கி நகரும்

இறுதிக்கட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக

யாழ்ப்பாணத்திலுள்ள திறமையானவர் கொழும்பு வர முடியாது’முத்தையா முரளிதரன்,

“இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் பரவவில்லை. அது கொழும்புக்கு மட்டும்

குறைகேள் விசாரணை குழு ஸ்தாபிக்க தீர்மானம்

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும்

மதுஷ் உள்ளிட்ட 39 பேர் டுபாய் நீதிமன்றில் ஆஜர்

டுபாயில் வைத்து கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாளக் குழுவொன்றின் தலைவரும்

IMF பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு

கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்

ஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது - மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர்

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை-கூட்டமைப்பு

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ்

மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்

அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு  தெருமின்விளக்கு திடடம் 
4 20 000 ரூபா  செலவில் 77  மின்குமிழ்கள் --மற்றும்  உதிரிபாகங்கள், மின்சார சபை  செலவு 
இந்த மொத்த செலவில்  பாதியை  நானும் மீதியை  என் உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி  சுரேஷ் , சுப்பிரமணியம்  சந்திரன்-பாசல்  , என் எஸ் சிவா  பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன்  ஜெர்மனி ஆகியோர்  பங்கு  போட்டுக்கொண்டுள்ளனர்  உறவுகளுக்கு  புங்குடுதீவில் சார்பில்  நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள்  பொருத்தப்படவுள்ளன ,முழுமையான  வரவு செலவு கணக்கறிக்கை  பின்னர்  தரவுள்ளேன் 
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும்   பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி  அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய  செயலாளர்  செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம் 
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---
திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
 2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி   மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர்  வீதி  தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி  கோவில் வரை 21  மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சந்தி  மலர்  கடையடி  முதல்  கிழக்கே  செல்லும் செம்மண் வீதி  .இது  கிழக்கு கடற்கரை  ஞான வைரவர்  ஆலயம்  மற்றும் கடற்படை  முகாம்   தொடர்ந்து கிழக்கு கடல் கரை  விளிம்பில்தெற்கு  நோக்கி வேளாங்கண்ணி  ஆலயம் வரை  செல்கிறது 
புங்குடுதீவு  மத்திய பிரதேச சபை  வடடாரத்திலும் மின்விளக்குகள் பொரு த்தப்படடன கடந்த 02.02.2019 மற்றும் 07.02.2019
ஆகிய தினங்களில் புங்குடுதீவு மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான திரு . புவிவேந்தன் அவர்களின் நிதியுதவியில் சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 21 மின்விளக்குகள் புங்குடுதீவில் பொருத்தப்பட்டன . புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் ராஜேஸ்வரி பாடசாலை வீதி , கலட்டி பிள்ளையார் கோயில் வீதி என்பனவற்றில் பத்து மின்விளக்குகளும் அதே வட்டாரத்தில் மணியந்தோட்ட வீதி மற்றும் அதன் சூழலில் மூன்று மின்விளக்குகளும் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அம்பலவாணர் அரங்கு வீதி , உயரப்புலம் வீதி என்பவற்றில் ஐந்து மின்விளக்குகளும் , மூன்றாம் வட்டாரத்தில் சங்கத்தார்கேணி சண்ஸ்ரார் விளையாட்டு கழக மைதான வீதியில் மூன்று மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன . மேலும் ஐந்து மின்விளக்குகள் விரைவில் முதலாம் வட்டாரத்தில் பொருத்தப்படவுள்ளன . நிதியுதவியை வழங்கிய திரு . புவிவேந்தன் அவர்களுக்கும் , மின்சார சபையினரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு உதவிய வட மாகாண ஆளுநரின் செயலர் திரு . இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கும் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . #சூழகம்_Soozhaga

ad

ad